வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

பாகிஸ்தான் டெஸ்ட் தலைவர் சல்மான் பட்

பாகிஸ்தான் டெஸ்ட் தலைவர் சல்மான் பட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லீட்சில் வருகிற 21ந் திகதி தொடங்கும் இரண்டாவது டெஸ்டுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி அறிவித்தார். ஆனால் நேற்று அளித்த பேட்டியில், காயத்தால் அவதிப்படுவதால் 2வது டெஸ்டில் தன்னால் ஆட முடியாது என்றும் கூறிவிட்டார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக தொடக்க ஆட்டக்காரர் 25 வயதான சல்மான்பட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் மற்றும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்துடன் நடக்கும் 4 டெஸ்ட் கொண்ட தொடர் ஆகியவற்றுக்கு அவர் தலைவராக நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

துணைத் தலைவராக கம்ரன் அக்மல் செயல்படுவார். கடந்த 3 ஆண்டுகளில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் 7வது தலைவர் சல்மான்பட் ஆவார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»