புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 

Huawei இன் இரண்டாவத

Huawei இன் இரண்டாவது தொகுதி P8 ஸ்மார்ட்போன்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei தனது பிரதான ஸ்மார்ட்போன் உற்பத்தியான P8 இன் இரண்டாவது தொகுதி இலங்கையில் கிடைக்கப்பெறுகின்றமை தொடர்பில் அறிவித்துள்ளது.

முதற்தொகுதி ஸ்மார்ட்போன்கள் இலங்கையில் முற்றாக விற்று தீர்ந்து போயுள்ளதாகவும், தற்போது இதனை கொள்வனவு செய்வதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பதிவுகளை மேற்கொண்டுள்ளமையாலும் இரண்டாவது தொகுதி ஸ்மார்ட் போன்களை இலங்கைக்கு எடுத்துவரு வதற்கு நிறுவனம் முடிவுசெய்துள்ளது. தற்போது சந்தையில் நியாயமான விலையில் கிடைக்கின்ற அதிக தொழில் நுட்பம் வாய்ந்த ஸ்மார்ட்போன்களாக இவை காணப்படுகின்றன.

2015 H1 காலப்பகுதிக்கான Consu mer Business Group பெறுபேறுகளின் அடிப்படையில், Huawei P8  ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்படுத்தப் பட்டு முதல் இரண்டு மாதங்களில் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி அடங்கலாக 52 நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான Huawei P8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Huawei இன் இலங்கைக்கான உள் நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு+ கூறுகையில், "இலங்கையில் புதிய ர்ரயறநi P8 பிரதான ஸ்மார்ட்போன் வெகுவிரைவாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. வெறு மனே ஒரு ஸ்மார்ட்போன் என்பதை விடவும், நேர்த்தி, குறைந்தபட்ச தோற் றம் மற்றும் பயன்பாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒன்றாகக் கொண் டுள்ள ஒரு ஸ்மார்ட்போனாக P8 காணப் படுகின்றது. P8 அதன் தோற்றத்திற் கும் அப்பால் மக்கள், எண்ணம், உற்சாகம் மற்றும் கலாசாரம் ஆகி யவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின் றது. அது வெறுமேன ஒரு மொபைல் போன் மட்டுமன்றி, மனிதநேயம், உற் சாக நயம் மற்றும் செழுமையான கலாசார பண்பாட்டினைக் கொண்டுள் ளது" என்று குறிப்பிட்டார்.

Huawei P8 ஸ்மார்ட்போன்களை ரூபா 69,999 என்ற விலையில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வோட் பிளேஸ் மற் றும் மிலாகிரிய சிங்கர் பிளஸ், லிபேர்ட்டி பிளாஸா சிங்கர் டிஜpட்டல், கண்டி சிட்டி சென்டர் சிங்கர் மெகா, அனுராதபுரம் இரு செலூலர், கண்டியில் டொய்டோ டிரேடிங் மற்றும் சம்பா ஸ்ரோர்ஸ், காலியில் மொபைல் வி'ன் மற்றும் தர்'ன என்டபிறைசஸ், மாத்தறையில் சித்ரு மொபைல், களுத்துறையில் த போன் ஆர்க்கேட் - பிரான்ட் n'hப், ஹொரணை ஒரையன்ட் மொபைல், லிபேர்ட்டி பிளாஸா கியு+டெல் மற்றும் போன் 4 யு, மnஜஸ்டிக் சிட்டி போன்ஸ், மnஜஸ்டிக் சிட்டி லொபி ஹ{வாவே பிரான்ட் TCC கல்கிசை பிரீமியம், வுஊஊ கொழும்பு மற்றும் லங்காபெல் றுவுஊ லொபி ஆகிய இடங்களில் மட்டுமே இவை கிடைக்கப்பெறுகின்றன.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.