புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 

செலான் வங்கியின

செலான் வங்கியின் கிரெடிட் கார்ட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் விடுமுறை காலத்தில் விசேட சலுகைகளுடன்

அதிகம் சேமிக்க வாய்ப்புகள்

செலான் வங்கியின் கிரெடிட் கார்ட் விசேட வெகுமதிகளுடன் ஆகஸ்ட் மாத விடுமுறைக்கு மேலும் பெறுமதி சேர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு விற்பனை நிலையங்களுடன் கைகோர்த்து ஆகஸ்ட் மாத விடுமுறைக் காலப்பகுதியில் செலான் கிரெடிட் கார்ட் வைத்தி ருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தாம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களின் போது கவர்ச்சிகர மான சேமிப்புகளை அனுபவிப்பதற் கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.

இந்தச் சலுகைகளில் விடுமுறை, பிரயாணம், ஆடைகள், உணவகங்கள், ஆபரணங்கள், சுகாதார நலன், வாக னங்கள் மற்றும் மேலும் பல பிரிவு கள் உள்ளடங்கியுள்ளன.

இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் செலான் வங்கியின் கார்ட்ஸ் பிரிவின் பிரதம முகாமையாளர் நிமேஷ் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கை யில், "வாடிக்கையாளர்கள் மத்தியில் செலான் வங்கியின் கிரெடிட் கார்ட் கள் பெருமளவு வரவேற்பை கடந்த சில ஆண்டுகளாக பெற்ற வண்ண முள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த சலுகை கள் அனைத்தும் வாடிக்கையாளர்க ளின் தேவைகளுக்கேற்ப கவனமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள துடன், இந்த விடுமுறைக் காலத்தில் செலான் குடும்பத்தைச் சேர்ந்த எம் வாடிக்கையாளர்களுக்கு உச்ச சேமிப் பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள் ளது" என்றார்.

புதிய கிரெடிட் கார்ட் உரிமையா ளர்களுக்கும் இந்த விசேட ஊக்கு விப்பு சலுகைத் திட்டங்களில் பங்கேற்று, குறித்த அனுகூலங்களை அனுபவித்து மகிழ முடியும் என பெர்னாண்டோ குறிப்பிட்டார். கடந்த ஆண்டு முன் னெடுக்கப்பட்ட திட்டத்துக்கு கிடைத்த பலத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் செலான் வங்கி புதிய விண்ணப்பதாரிகளுக்கான இணை வுக் கட்டணம் மற்றும் முதல் வருடத்துக்கான அங்கத்துவக் கட்டணம் ஆகியவற்றை விலக்கழித்துள்ளது.

கிரெடிட் கார்ட் உரிமையாளர்கள், தமது விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் என்பதுடன், செலான் வங்கி அதன் பயண மற்றும் விடுமுறை பங்காளர்களுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள விசேட விடுமுறைத் தெரி வுகளையும் தெரிவு செய்து அனு பவிக்கலாம்.

யுஎயni ரிசோர்ட் அன்ட் ஸ்பா (பென் தோட்டை மற்றும் களுத்துறை), க்ளப் ஹோட்டல், டொல்/பின் ஹோட்டல் சீகிரியா, உகா பே, ஜங்கிள் பீச், எலிபன்ட் ரீச் யால, த சுவிஸ் ரெசிடென்ஸ், சூர்யா ரிசோர்ட், கிரான்ட் உடவளவே ச/பாரி ரிசோர்ட் போன்ற பல ஹோட் டல்களில் 50மூ விலைத்தள்ளுபடிகளை செலான் கிரெடிட்கார்ட் உரிமையா ளர்கள் அனுபவிக்க முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.