புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

கொழும்பு நகரின் வானுச்சியை அலங்கரிக்கும் மற்றுமொரு கட்டடத்தை சன்சிட்டி நிர்மாணிக்கின்றது

கொழும்பு நகரின் வானுச்சியை அலங்கரிக்கும் மற்றுமொரு கட்டடத்தை சன்சிட்டி நிர்மாணிக்கின்றது

இலங்கையில் நிர்மாணம் மற்றும் அசைவற்ற ஆதன இருப்புத் தொழிற்துறையில் முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்துவருகின்ற Suncity Property Developers (Pvt) Ltd, தமது மற்றுமொரு செயற்திட்டமாக கொழும்பு நகர எல்லைக்குள் அலுவலகத் தளமொன்றை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

பல்வேறு கவர்ச்சியான அடுக்குமனைத் தொகுதிகளை நிர்மாணித்துள்ள சன்சிட்டி மிகவும் புதிதாக ஆரம்பிக்கும் ஒரு செயற்திட்டமாக இது காணப்படுகின்றது.

பம்பலப்பிட்டி ஆர்.ஏ டி மெல் மாவத்தையில் நிர்மாணிக்கப ;படுகின்ற இந்த கட்டடம் பந்துசேன அசோசியேட்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்ணளவாக 8,000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட இக்கட்டடம் நிறுவனங்கள் மிகவும் சௌகரி யமாக தமது தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக தேவை யான அனைத்து நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. 2014 பெப்ரவ ரியின் நிறைவில் பு+ர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்ற இக்கட்டடம் தற்போது கொள்வனவாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. "ஒரு நிறுவனம் என்ற ரீதியில், எமது வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலைகளில் தரமான அடுக்குமனைகளை வழங்கி, அவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கான உண்மையான பெறுமதியை வழங்குவதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம். இம்முறை நாம் அவர்களது சௌகரியத்திற்கும், வசதிக்கும் ஏற்ற வகையில் அலுவலகங்களை வழங்கவுள்ளோம்" என்று சன்சிட்டியின் முகாமைத்துவப் பணிப்பாளரான பின்சிறி பெர்னாண்டோ குறிப்பிட்டார். "கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இப்புதிய கட்டடம் அலுவலகம் ஒன்றிற்குத் தேவையான அனைத்து நவீன தேவைப்பாடுகளையும் கொண்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.