புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை முதலீட்டுக்கான ஒரு கவர்ச்சிகரமான முன்மாதிரி பங்குச்சந்தை

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை முதலீட்டுக்கான ஒரு கவர்ச்சிகரமான முன்மாதிரி பங்குச்சந்தை

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை 2013 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அனைத்துப் பங்கு விலைச்சுட்டியில் (யுளுPஐ) 4.78 மூ வளர்ச்சியுடனும் ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டியில் 5.79 மூ விளைவுடனும் வெளிப்படுத்தி முதலீட்டுக்கான ஓர் கவச்சியினை ஏற்படுத்தி இருந்தது. அனைத்துப் பங்கு விலைச்சுட்டியானது 2012 மற்றும் 2011 ஆம் ஆண்டு பதிவுகளாக முறையே (-7.1)மூ மற்றும் (-8.5)மூ எதிர்மறையான அசைவுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை பதிவுசெய்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை தொடர்பான இலகுவான கட்டளையினைத் தொடர்ந்து 2013ஆம் வருட காலப்பகுதியில் வங்கி வட்டி வீதங்கள் குறைவடைந்திருந்தன. வட்டி வீதங்களானது (சராசரி நிறை யிடப்பட்ட நிலையான வைப்பு வீதம்) 2012 டிசம்பர் 31 ஆம் திகதி 13.21மூ இருந்து 2013 நவம்பர் 29 இல் 11.96மூ மாகக் குறைவடைந்திருந்தன.

முதலீடுகளை பங்குகளில் பன்முகப்படுத்திய முதலீட்டாளர்களுக்கு காத்திரமான வருவாயினை வழங்கியிருப்பதுடன், குறித்த சில தெரிவு செய்யப்பட்ட பங்குகள் விதிவிலக்கான பெறுபேற்றினை வெளிப்படுத்தி இருந்தமையினை பங்குச்சந்தை சான்றுபடுத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்காக 57 கம்பனிகள் 15மூ திற்கு மேலான வருமானத்தினைப் பதிவுசெய்திருந்தன. (26 கம்பனிகள் 30மூ திற்கு மேலான வருமானத ;தினையும் 31 கம்பனிகள் 15மூ - 30மூ த்திற்கு இடைப்பட்ட விளைவினையும் பதிவுசெய்திருந்தன).

ரூபா 68.3 பில்லியன் பெறுமதி யான கம்பனித்துறை கடன்கள் உள்ளடங்கலாக ரூபா 119.4 பில்லியன் பெறுமதியான மூலதனத்தை பங்குச்சந்தையின் ஊடாக இந்த வருடத்தில் திரட்டப்பட்டிருந்தது. இது கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் அதிகமாகக் காணப்படுகின்றது. கடந்த வருடம் ரூபா 29.58 பில்லியனுடனான மொத்த மூலதனமாகப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.