புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

மீண்டும் கரீனா

மீண்டும் கரீனா

திருமணம் முடிந்து ஒரு வழியாக மீண்டும் சினிமா படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார் கரீனா கபு+ர்.

பொலிவுட் நடிகர் சயீப் அலிகான் - நடிகை கரீனா திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் திருமணம், வரவேற்பு, தேனி லவு முடிந்து மீண்டும் படப்பிடிப்பிற்குச் செல்லத் தயாராகிவிட்டாராம் கரீனா.

திருமணத்திற்கு முன்பே பேபு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் மீதி காட்சியில் நடிக்கவேண்டியுள்ளது.

மேலும் /பெவிகால், தபாங் 2 ஆகிய படங்களில் நடிக்கவும் கரீனா கையெழுத்திட்டிருக்கிறார்.

அதற்கான படப்பிடிப்பில் நவம்பர் 5ஆம் திகதி முதல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் /பெவிகால், தபாங் 2 படங்களில் குத்து பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் கரீனா.

தபாங் 2 படத்தில் வரும் குத்துப் பாடலில் ஆட கரீனா ஒத்துக்கொண்டதற்காக பி.எம்.டபுள்யு+ கார் ஒன்றினை சல்மான்கான் பரிசளித்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.