கொலிவுட் முதல் பொலிவுட் வரை கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பின்பு
இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபு+ரை மணந்து கொண்டு திரையுலகில் இருந்து
விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்போது “இங்கிலிஷ் விங்கிலிஷ்” படத்தில்
நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பு ஸ்ரீதேவி தனது குடும்ப வாழ்க்கை குறித்து
கூறுகையில், “இங்கிலிஷ் விங்கிலிஷ்” கதை எனக்கு பிடித்திருந்தது. இந்த
கதாபாத்திரத்துடன் நான் ஒத்துப்போனேன். படத்தில் வருவதுபோல் எனது மகள்களும் என்னை
அவ்வப்போது ஜhலியாக கிண்டல் செய்வார்கள். என்னை குழந்தைபோல் கவனித்துக்கொள்வார்
போனிகபு+ர். அவர் என்னை ஜோக்கர் என்றுதான் அழைப்பார் என்றார்.