புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

இவ்வார சிரிப்பு

இவ்வார சிரிப்பு

பாத்திமா தஹானி

அஜ்வாத் பாஸி - பாத்திமா நப்லா

பேருவளை


பொது அறிவு

* நுண்கோள்கள் எரி நட்சத்திரங்கள். வால் நட்சத்திரங்கள் என்பனவும் ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள வேறு வான் பொருள்களாகும்.

* கோள்மண்டலத்தில் உள்ள கோள்களை விட இடைவலயத்தில் காணப்படும் நுண்கோள்கள் சிறியனவாகக் காணப்படுவதானல் அவை எமது சாதாரண கண்களுக்கு தெரிவதில்லை.

* புவி தனது அச்சில் மேற்கில் இருந்து கிழக்காக சுழலும் - புவி தனது அச்சில் 23-1/2 பாகை சரிவாக அமைந்துள்ளது.

* புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன.

* சூரியனின் உச்சம் வடக்கில் கடகக்கோடு வரையும் தெற்கில் மகரக்கோடு வரையும் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது.

ரி. சிந்துஜா,

தரம் -8,

களு/ குலோடன் நவோதயா த.வி.

நேபொட


சாய்ந்த கோபுரம்

உலக அதிசயங்களில் ஒன்றான சாய்ந்த கோபுரம் இத்தாலியில் உள்ள பைசா நகரில் அமைந்துள்ளது. மாதா கோயில் அருகில் மணிக்கூண்டு க்காக கட்டப்பட்ட இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 1174ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

வெண்பளிங்குக் கற்களால் ஆன இக்கோபுரம் 180அடி உயரமும் 52 அடி விட்டமும் உடையது. எட்டு மாடிகளைக் கொண்ட இக்கோபுரத்தின் எட்டாவது மாடியில் மணி காணப்படுகிறது. கோபுரத்தின் உச்சியில் நகரைப் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோபுர கட்டுமானப் பணிகள் பாதி நிறைவடைந்த போது கோபுரத்தின் அடிப்பகுதி மண்ணுக்குள் புதையத் தொடங்கியது. அஸ்திவாரம் ஆட்டம் கண்டதால் கோபுரத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டன. ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் மீண்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1284ஆம் ஆண்டு நிர்மானப் பணிகள் செய்யப்பட்டு 1372ஆம் ஆண்டு முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது.

1969ஆம் ஆண்டுவரை ஆண்டொன்றுக்கு 1மி.மீ சாய்ந்து வந்த இக்கோபுரம், 1970 இல் சாய்வு நின்றமையானது பொறியியல் வல்லுநர்கள் மத்தியில் வியப்பாகவும், சவாலாகவும் இருந்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இக்கோபுரத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

பி.கே.தாரணி,

தரம் -10,

அ/ புனித கப்ரியல் மகளிர் பாடசாலை

ஹட்டன்.


ஸாலிகா ஸப்வான்
தரம்- 03, அல் ஹம்ரா ம.வி,
தர்ஹாநகர்.
ரஹ்மத் ஹாஜரா,
தரம்-06, களு/அல். ஹஸனியா ம.வி,
மக்கொன.
ஜி. கிஷான் சந்துஸ்,
களு/ குலோடன் நவோதயா த.வி,
நேபட.
எஸ். துலக்ஷி,
தரம்-04, அம்பேதென்ன த.வி,
மத்துகம.

மு. ஹரண்சிங்,
தரம்-07வி,
அக்/ இ.சி.மி. மகா வித்தியாலயம்,
அக்கரைப்பற்று.
எம். ஆர். எம். ரிஸான்,
தரம்-03,
கா/ துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலயம்,
துந்துவை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.