புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

கிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...?

கிண்ணத்தை கைப்பற்றுமா மேற்கிந்தியத் தீவுகள்...?

மே. இந்தியத்தீவுகள் இலங்கை

பலப்பரீட்சை இன்று

கடந்த இரு வாரங்களாக விறுவிறுப்பாகவும், சுவாரஷ்யமாகவும் நடைபெற்று வந்த சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டி இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வருகின்றது. இறுதிப் போட்டி வரை எதிர்பார்த்த இந்திய அணி சுப்பர்-8 சுற்றுடன் வெளியேறியது. இத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் பின்னடைந்திருந்த மேற்கிற்தியத் தீவுகள் அணி மீண்டெழுந்து இத்தொடரில் பல சாதனைகளுடன் முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மேற்கிந்தயித்தீவுகள், இலங்கை பலப்பரீட்சையில் இறங்குகின்றது. இதுவரை சர்வதேச 20க்கு 20 உலகக் கிண்ணம் கைப்பற்றாத மேற்கிந்திய அணி இம்முறை இச்சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணியும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. இம்முறை அரையிறுதியிலேயே பாகிஸ்தானை வென்று இறுதிக்கு முன்னேறியுள்ளது. எனவே சகலதுறையிலும் முன்னிலையில் இருக்கும் பலம்மிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணியை சொந்த மண்ணில் தோற்கடித்து முதன் முறையாக 20க்கு 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் முடிவுற்ற சுப்பர்-8 போட்டிகள் யாவும் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டித் தொடரில் நியூசிலாந்து விளையாடிய இரு போட்டிகள் சமநிலையில் முடிந்து சூப்பர் ஒவரினால் வெற்றி தீர்மானினக்கட்டது. கடைசியாக அவ்வணி சந்தித்த மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 154 ஓட்டங்கள் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 8 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் பெற போட்டி சமநிலையில் முடிந்து வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் பெற்றது. பதிலுக்கு கடின இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி ஒரு பந்து மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது. நியூசிலாந்துப் பந்துவீச்சாளர் செளதி அவ் ஓவரின் ஒரு ‘நோ’ ஒரு ‘வையிட்’ என வழங்கி மேற்கிந்தியத்தீவு அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

மற்றைய ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 169 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை துடுப்பாட்டத்தில் மஹேல 42 ஓட்டங்களப் பெற்றார். 170 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியிவரை போராடி வெற்றியின் விழிம்பிற்கே சென்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கை அணிக்காக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு லசித் மாலிங்க திறமையாகப் பந்து வீசினார். அவர் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்குப் பங்காற்றினார். இப் பிரிவில் அரையிறுதிக்கு மேற்கிற்தியவுகள் அணியும் இலங்கை அணியும் தெரிவாகின.

மற்றைய சுப்பர்-8 பிரிவில் 23ம் திகதி இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலாவது போட்டி பாகிஸ்தான் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் நடைபெற்றன. இத் தொடரில் அவுஸ்திரேலிய அணி முதற் சுற்றிலும் சுப்பர்-08 சுற்றிலும் தான் பங்குபற்றிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று பலமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டி மிக முக்கிய போட்டியாக அமைந்தது. அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாக வேண்டுமானால் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை துரித ஓட்ட வேகத்தில் வெல்ல வேண்டும்.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்பம் மோசமாக அமைந்தது. 5 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3வது விக்கெடுக்காக இணைந்த கம்ரன் அக்மல்- நkர் ஜெம்சத் ஆகியோரும் 80 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் அவ்வணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறினர். அவ்வணியின் வெற்றிக்கு தொடர் முழுக்க பங்காற்றிய டேவிட்வோனர்- ஷேன் வொட்சன் ஜோடி தலா 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளயில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிதானமாக விளையாடிய மைக் ஹஸி அரைச்சதம் கடந்தார். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் பெற்று 32 ஓட்டங்களால் தோல்வியுற்றது. ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ராசா ஹஸன் தெரி வானார். அவுஸ்திரேலிய அணி தோல்வியுற்றாலும் ஓட்டவேக அடிப்படையில் அப்பிரிவிலிந்து முத லாவது அணியாக அரையிறுதிக்குத் தெரிவாகியது.

அன்று இரவு 7.30 மணிக்கு அரையிறுதிக்குச் செல்லும் கடைசி அணியைத் தெரிவு செய்வதற்கான கடைசிப் போட்டி இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு இம்முறையும் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுக்க செவாக்-காம்பீரால் முடியவில்லை. தென்னாபிரிக்காவின் வேகத்துக்கும், சுழலுக்கும் மாறி மாறி விக்கெட்டுகள் சரிய இந்திய அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால் தென்னாபிரிக்காவை 122 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால் பாகிஸ்தான் அணி பெற்ற ஓட்டவேக வீத அடிப்படையில் அரையிறுதிக்கு தெரிவாகிவிடும்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஓட்டம் பெறமுன் முதல் விக்கெட்டை இழந்தது. சுஹீர்கானின் முதல் ஓவரிலேயே ஹஷிம் அம்லா ஆட்டமிழந்தார். இடைக்கிடை தென்னாபிரிக்க அணியின் விக்கெட்டுகள் விழுந்தாலும் வெற்றி இலக்குக்குத் தேவையான ஓட்டங்களும் சேர்ந்த வண்ணமேயிந்தது. 16 ஓவரின் நான்காவது பந்து வீச்சில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் நழுவிப் போனது. அவ்வேளையில் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 25 பந்துகளில் 31 ஓட்டங்களே தேவைப்பட்டது. அதன் பின் அடிக்கடி விக்கெட்டுகள் விழ கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அவ் ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்க அணியின் கடைசி விக்கெட்டும் விழ இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார். இவ்வெற்றியுடன் இப்போட்டித் தொடரிலிருந்து வெளியேறியது அவ்வணி.

முதல் அரை இறுதியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் கடந்த 4ம் திகதி மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

பந்து வீச்சுக்கு சாதகமான இம்மைதானத்தில் ஓட்டங்கள் எடுக்க சிரமப்பட்டது இலங்கை அணி. ஆனால் விக்கெட்டுகள் விழாமல் சிறுகச் சிறுக ஓட்டங்களைச் சேர்ந்தது. முதல் விக்கெட்டுக்காக 10 ஓவர்களில் 61 ஓட்டங்கள் என்ற நிலையில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது. தலைவர் மஹேல ஜெயவர்தன 36 பந்துகளில் 42 ஓட்டங்கள் பெற்ற போது அட்டமிழந்தந்தார். குமார் சங்கக்காரவும் அதிரடியாக ஆடி 18 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மறு முனையில் நிதானமாக ஆடிய டில்ஷான் 42 பந்துகளில் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 139 4 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் பெற்றது இலங்கை அணி. பந்து வீச்சில் ஹபிஸ், அப்ரிடி, குல், அஜ்மர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

140 என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியினர் 5 ஓவர்களில் 31 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை இழந்தது. இம்ரான் நkர் 20 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த ஜெம்செத், கமரன் அக்மல், மலிக் விரைவாக ஆட்டமிழக்க 12 ஓவர்கள் முடிவில் 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி. தலைவர் ஹபிஸ் நம்பிக்கையூட்டும் வகையில் ஆடினார். 15 ஓவரின் முதல் பந்திலேயே 91 ஓட்டத்தில் ஹபீஸ் ஆட்டமிழந்து செல்ல, அடுத்த பந்தில் அப்ரிடியும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்ட மட்டுமே பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக ரங்கன ஹேரத் தெரிவானார்.

இப் போட்டித் தொடரில் திறமை காட்டி வரும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. சர்வதேச தரவரிசையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு சர்வதேச தர வரிசையில் 4ஆம் இடத்தில் இருந்த இலங்கை அணி இப்போது 129 புள்ளிகளுடன் முதல் இடத்திலுள்ளது. இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் 118 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. துடுப்பாட்டத்தில் முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (830), அவுஸ்திரேலியாவின் வொட்சன் (815), மேற்கிந்தியாவின் கெய்ல் (796) உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தான் வீரர் அஜ்மல் 784 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இஙகிலாந்தின் சுவான் (750) இரண்டாவது இடத்திலும், இலங்கையின் அஜந்த மெண்டிஸ் (733) முன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சகலதுறை வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன் 547 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் தலைவர் ஹபிஸ் 340 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அப்ரிடி 302 புள்ளிகளைப் பெற்று 3 இடத்திலும் உள்ளனர்.

4வது சர்வதேச 20க்கு 20 போட்டித் தொடரில் இதுவரை ஓட்டக் குவிப்பிலும், விக்கெட் வீழ்த்திவதிலும் அவுஸ்திரேலிய வீரர் ஷென் வொட்சனே முதலிடத்தில் உள்ளார். இவர் 13 விக்கெட்களையும், 274 ஓட்டகளையும் பெற்று அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்குக் காரணமாகியுள்ளார். இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 11 விக்கெட்டுகளுடன் இரண்டாவது கூடிய விக்கெட் வீழ்த்தியவராவார்.

4வது 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று முடிவில் ‘சுப்பர் -8’ சுற்று ஆரம்பமானது. இம்முறை சுப்பர்-8 போட்டிகளில் விளையாடும் அணித் தெரிவுகள் முதற் சுற்றுக்கு முன் கடந்த ஆண்டு சர்வதேச தரவரிசைப்படியே சுப்பர்- 8க்கு அணிகள் தெரிவு செய்துள்ளார்கள் என எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இதற்கு முன் நடைபெற்ற ரக்பி தொடர்கள், உதைபந்தாட்டத் தொடர் போன்ற இவ்வகைப் போட்டித் தொடர்கள் சுப்பர்-8 க்கு அணிகள் தேர்வு செய்யும் போது முதற் சுற்றில் பிரிவுகளில் உள்ள அணிகள் பெறும் புள்ளிகளுக்கு ஏற்ப சுப்பர்-8 அணிகள் தெரிவு செய்யப்பட்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். உதராணமாக முதற் சுற்றில் ஏ பிரிவில் புள்ளிகளடிப்படையில் முதல் இடம் பெறும் அணியும் பி பிரிவில் புள்ளிகளடிப்படையில் 2ஆவது இடம் பெறும் அணியும்தான் சுப்பர்-8 ல் ஒரே பிரிவில் இடம்பெறும். ஆனால் இம்முறை டி/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அப்படியில்லை. முதற் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி ஒரே பிரிவிலும், ஒரு போட்டியில் வெற்றி பெற்ற அணி மற்றப் பரிவிலும் இடம்பெற்றுள்ளது. அதாவது இப்போட்டித் தொடரில் பலம்மிக்க 4 அணிகளும் ஒரு பிரிவாகவும், பலம் குன்றிய 4 அணிகள் ஒரு பிரிவாகவும் சுப்பர்-8 சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது. அதாவது இச்சுற்றுத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அட்டவணைப்படி சுப்பர் -8க்கு அணி தெரிவாகியுள்ளது. அப்படியானால் முதல் சுற்று நடைபெற்றிருக்கத் தேவையில்லையே.

கடந்த வருட சர்வதேச டி/20 தரவரிசைப்படி சுப்பர் -8க்கு அணிகள் தெரிவாகியிருந்தாலும் அது தவறானதே. ஏனென்றால் தொடர் நடைபெறும் தற்போதைய திறமையின் அடிப்படையிலேயே சுப்பர் -8க்கு அணிகள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றைய போட்டித் தொடர்களிலும் இப்படித்தான் தெரிவு செய்கிறார்கள். இமமுறை ஏன் எந்தக் குளறுபடி? நம் கிரிக்கெட் ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

மேலும் முக்கியமான பெரிய போட்டித் தொடரில் ஒரு சில அணிகள் ஒரே மைதானத்தில் முதற்சுற்றுப் போட்டிகள் உட்பட அனைத்துப் போட்டிகளும் நடைபெற போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளதும் இம்முறை பெரும் குறையாகவே உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.