புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.

பி. முத்தையா இரங்கல் கவிதை

பி. முத்தையா இரங்கல் கவிதை

தோழமைச் சூரியனே!
சோவியத் காலண்டரை
சுவரிலே மாட்டும்போது
முத்தையர் நினைவுகள்தான்
முந்திக்கொண்டு உந்திவரும்

வட்டவளை முத்தையனார்
வாஞ்சையுள்ள நண்பராகி
கிட்டத்தட்ட நாற்பதாண்டை
கடத்தியதே எழுத்தில்தான்.

வானொலி நிகழ்ச்சியென்றும்
வாராந்த தமிழ் இதழென்றும்
தொலைக்காட்சி மொழிபெயர்ப்பு
தொடர்ந்த விஷனென்றும்
எழுதுனராய் இயக்குனராய்
இறுதி மட்டும் இதழாசிரியராய்
ஆற்றிய பணிகளெல்லாம்
தேற்றிடாதே! தேம்பிடும் எமக்கு!

அட்டன் ஹைலண்ட்ஸின்
அடக்கமுள்ள மாணவனாய்
ஆங்கிலப் புலமையிலே
அறிவூட்டும் பாத்திரமாய்
கலைமணி விருதோடு
கணக்கில்லா விருதுபெற்று
முத்தையா முந்திவிட்டார்
முனகலுக்கே வழிதந்து.

சாகித்திய விருதுபெற்று
சாகுமட்டும் எழுதிவிட்டு
வாழுந் தமிழுக்கே
நாளும் பணியாற்றிவிட்டு
பேழை தினகரனை
பெய்தவர் முத்தையனார்
நாளை தொடருமுன்னர்
நமைவிட்டு போய்விட்டார்!

விரல்விட்டு எழுதிவிட்டு
வெளிச்சம் போடும் நபராயின்றி
திரை மறைவில் இருந்து கொண்டு
தினமும் எழுதிவந்த
முத்தையா நமக்கெல்லாம்
மூன்னுதாரணம் ஆகிப் போனார்!

செய்தியின் வருகையோடு
சேர்ந்து வந்த கலைஞானி
ஊடகத் துறையதனை
உரமூட்டி வளர்ப்பதற்கு
ஆற்றிய பணிகளெல்லாம்
அலைமோதும் நம் மனதில்

மத்தியமும் ஊவாவும்
மனங்கொண்ட முத்தையரை
சத்தியமாய் தோழர்கள்
சந்தித்ததே கம்யூனிஷராய்
வித்தகராய் விளங்கி மண்ணில்
வெற்றிகளை குவித்த நண்பர்
தோழமைச் சூரியனாய்
தோற்றதேன் காலனிடம்...?


தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதியான வீடுகள்.

பரமேஸ்வரி

முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் பிரதான மேல் கொத்மலை நீரணை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.