ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

கஸகஸ்தான் நாட்டின் பெயரில் ‘ஸ்தான்’ பகுதியை நீக்க திட்டம்

கஸகஸ்தான் நாட்டின் பெயரில் ‘ஸ்தான்’ பகுதியை நீக்க திட்டம்

கஸக்ஸ்தான் நாட்டின் பெயரில் இருக்கும் ‘ஸ்தான்’ என்ற பகுதியை அகற்றிவிட அந்நாட்டு ஜனாதிபதி நூர்சுல்தான் நஸர்பயவ் ஆலோசித்து வருகிறார். எண்ணெய் வளம் கொண்ட கஸக்ஸ்தான் மத்திய ஆசியாவில் தம்மை வேறுபடுத்தி காட்டவும் ஸ்தான் என்ற பகுதி வறுமையை சுட்டிக்காட்டுவதாகவும் கூறியே இந்த பெயர் மாற்றத்தை செய்ய விருக்கிறது.

நிலப்பரப்பில் உலகின் 9ஆவது மிகப் பெரிய நாடாக இருக்கும் கஸக்ஸ் தானின் மக்கள் தொகை 17 மில்லியனாகும்.

சோவியத் ஒன்றியத்திற்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கிறது. இதன் அயல் நாடுகளாக கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பகிஸ்தான் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையான பின்னர் நாட்டின் கனிய வளத்திற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களும் கஸக்ஸ்தானில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளன. எனினும் பல நாடுகளும் ஒரே வகையான பெயரை வைத்திருப்பதால் தமது நாடு உலக அரங்கில் சரியாக அறிமுகமாகவில்லை என்று கஸக்ஸ்தான் அரசு கவலை தெரிவிக்கிறது.

‘கஸக்கெலி’ என்ற பெயர் தமது நாட்டுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி