ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

செய்யாத குற்றத்திற்கு 21 ஆண்டு சிறை அனுபவித்தவர்கள் விடுதலை

செய்யாத குற்றத்திற்கு 21 ஆண்டு சிறை அனுபவித்தவர்கள் விடுதலை

அமெரிக்காவில் மூன்று கொலைகளை செய்ததாக தவறுதலாக குற்றம் சுமத்தி 21 ஆண்டுகள் சிறை அனுபவித்த இருவர் விடுவிக்கப்பட் டுள்ளனர்.

புதிய டி. என். ஏ. ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இந்த இருவர் மீதான குற்றச்சாட் டையும் நீதிபதி அகற்றிக்கொண்டார்.

அன்டோனி யார்புக் மற்றும் ஷர்ரிப் வில்சன் ஆகியோர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். எனினும் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வழக்கு தொடரப்படும் என அரசு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சிறைத் தண்டனை அனுபவித்த யார்புக்கின் தாய், அவரது 12 வயது சகோதரி மற்றும் உறவுக்காரப் பெண் ஆகியோரை கடந்த 1992 ஆண்டில் கொலைசெய்ததாகக் குற்றம் சுமத்தியே இருவரும் சிறை அனுபவித்து வந்தனர்.

எனினும் கொலையுண்டதாயின் விரல் நகத்தில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. வேறு ஒரு கொலையாளியுடன் பொருந்தியது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும் போது 15, 18 வயதாக இருந்த இருவரும் தற்போது 30களின் கடைசி பகுதியில் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளனர்.

இது ஒரு பயங்கர கனவு என்று சிறையிலிருந்து விடுதலையான யார்புக் விபரித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி