ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

60 வருடங்களின்பின்

60 வருடங்களின்பின்

பெண்ணாக மாறிய ஆண்

60 வருடங்களாக தன்னை ஆண் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவரை மருத்துவர்கள் பெண் என்று கூறியதால் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார் அந்த நபர்.

சீனாவில், வயிறு வீக்கத்துக்காக டாக்டரிடம் சென்ற நபர், பெண் என தெரிய வந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த 66 வயது நபர், வயிறு வீக்கமாக இருப்பது குறித்து டாக்டரிடம் பரிசோதிக்க சென்றார். அவரை நன்றாக பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்ட அந்த நபருக்கு பெரிய அதிர்ச்சி. இதுநாள் வரை அவர் தன்னை ஆண் என, நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் பெண் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

வியட்நாமில் பிறந்த சீனரான அவர், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். ‘பார்ப்பதற்கு ஆண் போல தோன்றினாலும், அவர் பெண் தான். உலகில் யாராவது ஒருவருக்கு இது போன்ற உடல் குறைபாடு ஏற்படுவது உண்டு. எனினும் அவரால் கருத்தரிக்க முடியாது’ என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ‘இவ்வளவு காலம் ஆண் என நினைத்து வாழ்க்கையை கழித்துவிட்டேன். இனிமேல் பெண்ணாக நான் வாழ விரும்பவில்லை. அதற்கேற்ப எதாவது மருந்து, மாத்திரை இருந்தால் கொடுங்கள்’ என இந்த நபர் டாக்டர்களிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி