ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160

வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர் பாதுகாப்பில் அரசு தீவிர கரிசனை

வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர் பாதுகாப்பில் அரசு தீவிர கரிசனை

லங்கையின் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 5 இலட்சத்திற்கும் கூடுதலான நம் நாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடு களிலும், சிங்கப்பூர், புருணை போன்ற நாடுகளிலும் ஓரிரு வருடங் கள் கூட தங்கள் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிந்து நெற்றிவியர்வை சிந்தி தங்கள் கடுமையான உழைப்பின் மூலம் அனுப்பி வைக்கும் வெளிநாட்டு செலாவணி பேருதவியாக அமைந்துள்ளது.

இவ்விதம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளில் வரு டக்கணக்கில் உழைக்கும் இந்த அப்பாவிகள், அங்கு பல்வேறு துன்பங் களை எதிர்நோக்கும் போது அவர்களுக்கு உதவி செய்வதற்கு எவரும் பெரும்பாலும் முன்வருவதில்லை.

வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் நம் நாட்டு பிரஜைகளில், குறிப்பாக பெண்கள் வீடுகளில் பணிப்பெண்களாகவும், ஆடை தயாரிப்பு தொழிற் சாலைகளிலும் கஷ்டமான நிலையில் பணிபுரிந்தவண்ணம் இருக்கின் றார்கள். பல பெண்கள் வீட்டு எஜமானிகளால் அடித்து, துன்புறுத்தப்ப ட்டு உடல் காயங்களுக்கு இலக்காகிறார்கள். வேறு சிலர் வீடுகளில் அந்த வீட்டு எஜமானர் மற்றும் அவரது வயது வந்த ஆண் பிள்ளை களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இவ்விதம் பெண்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் போது துன்பங்களை அனுப வித்தாலும் இவர்களில் பெரும்பாலானோர் அங்கு நல்ல முறையில் அவர்களின் எஜமானர்களால் நடத்தப்பட்டு கை நிறைய சம்பளமும் வாங்குவதுண்டு.

வளிநாடுகளில் வேலை செய்யும் பெண்களில் சிறு எண்ணிக்கையினர் வீட்டு எஜமானர்களினதும், எஜமானிகளினதும் துன்புறுத்தல் காரண மாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. இவர்களைவிட சில பெண்களின் உடலில் ஆணி அடித்து துன்புறுத்திய கொடுமைகளும் மத்திய கிழக்கில் நடந்துள்ளன. துன்புறுத்தலை தாங்கிக் கொள்ளாத நிலையில் மாடி வீடுகளில் இருந்து கீழே பாய்ந்த பல பெண்கள் நிரந்தரமாக ஊனமுற்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

சமீபத்தில் மூதூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தின் துயரைப் போக்கு வதற்கு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற ரிஸானா என்ற இளம் பெண் தெரியாத்தனமாக ஏதோ கைத்தவறினால் ஏற்பட்ட விபத்தில் ஒரு சிறு குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்தமை யினால் அந்நாட்டின் கடுமையான ஷரீஆ சட்டத்தின் கீழ் அவருக்கு கழுத்தைத் துண்டிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நல்லாட்சியின் கீழ் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் அநியாயமாக மரணிக்க இடமளிப்பதில்லை என்ற கோட்பாட்டின் கீழ் இலங்கை அரசாங்கம் ரிஸானாவின் சார்பில் கருணை மனுவை சமர்ப்பித்து இந்த அபலைப் பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இம்முயற் சிக்கு வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவும், அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் டிலான் பெரேராவும் தீவிரமாக தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

இலங்கை அரசாங்கம் ரிஸானாவின் சார்பில் எவ்வளவு தொகை இரத்தப் பணத்தை வழங்கியாவது அவரை காப்பாற்றுவதற்கு எடுத்து வரும் முய ற்சிகளுக்கு இந்நாட்டு மக்கள் அனைவரும், அரச சார்பற்ற அமைப்புக ளும் சமூக அமைப்புகளும் பூரண ஆதரவை நல்கி வருகின்றனர்.

இவ்விதம் நம்நாட்டு மக்கள் வெளிநாடுகளில் பிரச்சினைகளை எதிர் நோக்குவதற்கு இங்குள்ள சட்டவிரோதமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அவை சட்டபூர்வமான ஒப்பந்தங்களை வெளிநாட்டில் வேலை வழங் கும் நிறுவனங்களுடன் செய்து கொள்ளாமல் மக்களை அங்கு வேலை க்கு அனுப்புவதால் தான் இத்தகைய கஷ்டங்கள் இலங்கையிலிருந்து வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

இதனால் பல மாதங்களாகியும் அங்கு பணிபுரியும் சிலருக்கு சம்பளம் கொடு க்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்ப ட்ட சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் எடுக்க முடியாதிருக்கிறது. சமீபத்தில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவ னங்களை முற்றுகையிட்டு அதன் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவை இரத்தினபுரி, பொரளை, கஹவத்த, வெலிமட மற்றும் பேலியகொட ஆகிய பிரதேசங்களில் இயங்கி வந்திருக்கின்றன. இந்நிறுவனங்களில் முடக்கி வைக்கப்பட்டிருந்த பல கடவுச் சீட்டுகளையும், போலி ஆவ ணங்களையும் கைப்பற்றியிருக்கும் பொலிஸார் அங்கிருந்த சில நபர்க ளையும் கைது செய்துள்ளார்கள்.

இதையடுத்து, இலங்கையில் சட்டவிரோதமாக இயங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படு மென்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங் ஸ்லி ரணவக்க அறிவித்துள்ளார். வெளிநாடு செல்லும் இலங்கையரு க்கு பூரண பாதுகாப்பு அளித்து, அவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக் கும் போது அவர்களுக்கு பூரண பாதுகாப்பு அளிப்பதென்று தமது பணி யகம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் தொழில் புரிந்து, இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதுணை புரியும் எமது நாட்டவர்களுக்கு பூரண பாதுகாப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமை என்பதை வலி யுறுத்தியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சம்பந்தப் பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரகங்களும் பூரண ஒத்துழைப்பையும், அனுசரணையையும் வழங்க வேண்டுமென்றும் உத் தரவிட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி