வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

முல்லைத்தீவு மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்

வெளிநாட்டுப் பறவைகள் வருகை அதிகரிப்பு:

முல்லைத்தீவு மாவட்டத்தில்
பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்

முல்லைத்தீவுக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இறைச்சிக்காக பிடிக்கப்படுவ தினால் இந்த மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ள தென சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பறவைக்காய்ச்சலுக்குரிய தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலை பறவைகளுக்கு சாதகமாகவுள்ளதினால் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக அதிகளவு நீர் நிரம்பிய குளங்களை நாடி வருகின்றன. இந்த வகையில் முல்லைத்தீவுக்கு தாராளமாக பறவைகள் வந்துள்ளன. உள்ளூர் மக்கள் இறைச்சிக்காக இதனைபிடித்துச் செல்கின்றனர்.

இதன் காரணமாக பறவைக் காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »