வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

கலிலியோ


கலிலியோ

கலிலியோ... இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15 ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார்.

இத்தாலியில் பிறந்து சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுலாரஸ்யமான தகவல்கள் இதோ.

கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைந்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த பெளதிகவியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது. இத்தாலியிலுள்ள வைசாநகர பல்கலைக்கழகத்தில் கலிலியோவுக்கு கணிதப் பேராசிரியராக வேலை கிடைத்தது.

ஆனால் தனது ஆரா ய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கிவிட்டனர்.

கண்ணாடி விம்பம், மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம் சட்டைப்பையில் வைக்கும் சீப்பு, பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.

தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துக்களால் வத்திக்கான் நகரக் கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ 1633 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

1638 ஆம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். 1642 ஆம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.

கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின் 1737 ஆம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது அண்டன் பிரான் செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்துப் பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

o உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மொஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்

o ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பழைய பெயர், மெசபதேமியா

o உலகிலேயே மிகப் பெரிய கோயில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்.

o உலகிலேயே வெப்பமான இடம் லிபியாவில் உள்ள அசீஸியா

o உலகிலேயே மிகவும் குளிர்ந்த இடம் ரஷ்யாவில் உள்ள சைபீரியா

o மிக அதிகமுறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா.

o உலகநாடுகளில் உள்ள அனைத்து அணு ஆயுதங்களும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை காட்டிலும் பத்தே நிமிடங்களில் சூறாவளி அதிக ஆற்றலை வெளிப்படுத்தும்.

o பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 6 மடங்கு அதிகமாக மின்னலால் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மரங்களைக் காட்டிலும் கருவேல மரம் தான் அதிகளவில் மின்னலால் பாதிக்கப்படுகிறது.

o மழையில் விற்றமின் கி12 உள்ளது. ஒரு மழைத்துளியின் வேகம் மணிக்கு 17 மைல்கள்.

o 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட கடுங்குளிரில் நயாகரா அருவி முழுவதும் உறைந்து விட்டது.

o உலகம் முழுதும் சராசரியாக தினமும் பிறக்கும் குழந்தைகளில் 12 குழந்தைகள் தவறுதலாக மாற்றப்பட்டு வேறு தம்பதியினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

o சொக்லேட்கள் நாய்களுக்கு முதல் எதிரி. இது பலருக்கும் தெரிவதில்லை. சொக்லேட்கள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைக் கடுமையாக பாதிக்கும். ஒரு சிறிய சொக்லேட்டை சாப்பிட்டால், நாய்க்குட்டி உயிரிழக்கும்.

o புதைகுழியில் விழுந்து விட்டால் பத ற்றம் கொள்ளாமல் உங்கள் கால்களை மெதுவாக உயர்த்தி, முதுகுப் பகுதியை மட்டும் கிடைமட்டமாக வைத்து படுத்தால் மூழ்கமாட்டீர்கள்.

o முதலைகளிடம் மாட்டிக் கொண்டால் உடனே உங்கள் கைகளைக் கொண்டு அதன் கண்களை குத்தி விட்டால், அடுத்த நொடியே உங்களை விட்டு விலகி விடும்.

o உலகில் அதிகப்படியானோர்க்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர், “முகம்மது” இது ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை.

o குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய்விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால் பெரியவர்கள் 16 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

o சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

o பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

o மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள் தேனீரில் சீனிக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

o பெண்களை விட ஆண்கள் அதிகமாகச் சத்தம் போட்டு சிறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

o அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால் 55 வயதை நெருங்கும் போது ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து ‘பொக்கை’ வாயர்களாக மாறுகின்றனர். அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச் சென்று சிகிச்சை பெறுகின்றனர்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»