வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

உள்ளங்கை நிலம் பார்க்க வேண்டும்!

உள்ளங்கை நிலம் பார்க்க வேண்டும்!

அந்தக் காலத்து அரசர்கள் புலவர்களுக்கோ பிறருக்கோ பரிசுகள், விருதுகளைக் கொடுக்கும்போது தட்டில் வைத்துதான் கொடுப் பார்களாம். காரணம் கைகளால் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக் கொள்ள நேரும். வாங்கிக் கொள்வது என்பது பிச்சை எடுப்பவர்களின் செயலாம். ஆனால் தட்டில் வைக்கும்போது அப்படி அல்ல. அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

இவற்றிற்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் முன்னதில் உள்ளங்கையானது வானம் பார்க்கிறது. பின்னதில் உள்ளங்கை நிலம் பார்க்கிறது. உள்கை என்று பெயரிடாமல் ஏன் உள்ளங்கை என்று பெயரிட்டார்கள் என்பது சிந்திக்கத்தக்கது. உள்ளங்கை என்பதை உள்ளம்+கை என்றும் பிரிக்கலாம்.

நம் உள்ளம் கை நிலம் பார்க்க வேண்டுமானால் நாம் கொடுக்கும் குணம் உள்ளவர்களாக மாறவேண்டும். அதேநேரத்தில் நம்மில் பலருக்கு அடிப்படை வசதிகள் இருந்தும் உள்ளங்கையை வானத்திற்குக் காட்டும். (அதாவது கேட்டுப் பெறும்) குணம் இருக்கிறது. பிறரிடம் ஏதும் கேட்டுக்கொண்டே இருப்பவர்கள்; மானம் மரியாதை யைவிட சுயநலமே பெரிது என எண்ணுபவர்கள்; மருத்துவிட்டால் இருவருக்குமே மனக்கஷ்டம்தான் என்பதையும் பொருட்படுத்தாதவர்கள் இவர்கள்.

பிறரைச் சார்ந்து வாழாக் குணமும், என்னால் இயன்றது; எனக்குப் போதும் என்கிற மனப்பக்குவமும், தன்மானத்தின் அடையாளங்களாகும்.

இக்கிறதுதானே! கொடுக்கட்டுமோ! என எண்ணுவதும், தாங்கள் கேட்டுப் பெறுவதை எல்லா நிலைகளிலும் நியாயப்படுத்துவதும் மனித பிறப்புக் குப் பெருமை சேர்க்காமல் பிறரை அண்டியே வாழ்வதும் என்ன வாழ்வு?

இனி நம் உள்ளங்கை வானம் பார் க்கும் சந்தர்ப்பங்களை குறைத்து நிலம் பார்க்கும் (கொடுக்கும்) வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்!


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»