வரு. 78 இல. 170

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 10
விகிர்தி வருடம் ஆடி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, JULY 22, 2010

காட்சிப்படுத்தல் மூலம் கற்பித்தல் முறை

ஜனாதிபதி காலியில்

(22.07.2010 12.55PM)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலி நகருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். காலி நகர கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை இந்திய கிரிக்கெட் போட்டிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இது முத்தையா முரளிதரன் விளையாடும் கடைசிப் போட்டியாகும். அவரை நேரடியாகப் பாராட்டும் வகையிலேயே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்தார் முரளிக்கு ஜனாதிபதி நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.

அமெரிக்க அதிகாரி வருகை

(20.07.2010 8.50am)

அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் ஆசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரஙகளுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபர்ட் பிளேக் நாளை இலங்கை வருகின்றார். .அரச உயர்மட்ட அதிகாரிகளை இவர் சந்தித்துப் பேசுவார்.

போட்டிப் பரீட்சை 18ம் திகதி

(16.07.2010 3.25pm)

ஆங்கில மொழிமூல ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை நாளை மறுதினம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 554 பட்டதாரி ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வகையிலேயே இந்தப் போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.

ஈராக் தீ விபத்தில் இலங்கையர் பலி

(16.07.2010 3.25pm)

ஈராக்கின் வடபகுதியில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் உயிர் இழந்த இலங்கையர் ஒரு தொலைத்தொடர்பு பொறியியலாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது

வைகோ மற்றும் நெடுமாறன் கைது

(14.07.2010 4.05pm)

தமழ்நாட்டில் சென்னை நகரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய அலுவலகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தமைக்காக ஏற்கனவே திரைப்பட இயக்குனர் சீமானும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.ன



 

156 ஆண்டு பழைமை:

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

மறுசீரமைப்புகுழு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

வெள்ளவாயவில் 40 ஏக்கரில் நவீன சிறை

இடநெருக்கடியை தவிர்க்க அவசர நடவடிக்கை

11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.

விவரம் »
 


ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போது எடுத்த படம்.
(படம்:- சுதத் சில்வா)