வரு. 78 இல. 170

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 10
விகிர்தி வருடம் ஆடி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, JULY 22, 2010

இடர் முகாமைத்துவம், மனிதாபிமான உதவிகள் குறித்து ஆராய ஏசியான் தலைவர்கள் நாளை வியட்நாமில் ஒன்று கூடுவர்

இடர் முகாமைத்துவம், மனிதாபிமான உதவிகள் குறித்து ஆராய
ஏசியான் தலைவர்கள் நாளை வியட்நாமில் ஒன்று கூடுவர்

ஏசியான் அமைப்பின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை வியட்நாமின் தலைநகர் ஹனோயில் ஆரம்பமாகின்றது. இதற்கு முன்னோடியாக ஏசியான் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் திங்கட்கிழமை சந்தித்தனர்.

இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா உட்பட 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் 10 நாடுகளே தற்போதைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல், பிராந்தியத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இந்த மாநாடு நாளை தொடங்கவுள்ளது.

புருணை கம்போடியா, இந்தோனேஷியா, லாஓஸ், மலேஷியா, மியன்மார், பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளே இந்த அமைப்பில் அக்கறையுடன் செயற்படுகின்றன.இயற்கை அனர்த்தங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடுகள் இந்த அமைப்பிலுள்ளன. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் என்பவை பிரதானமாகும். வியட்நாம், சீனா என்பவை தற்போது வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளன.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்க ளின்போது மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க இந்நாடுகளிடையே பொதுவான ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் நிவாரண விடயங்களில் இணைந்து செயற்படல் ஆகிய இரண்டு விடயங்களுமே சாதகமான நிலைப்பாட்டை எட்ட முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மியன்மாரின் இராணுவ ஆட்சி, வடகொரியாவின் யுரேனியம் செறிவூட்டல் போக்கு என்பவற்றால் ஏனைய விடயங் களில் உடன்பாட்டை ஈட்டிக்கொள்வது சாத்தியமற்றதாகிவிடுமென்றும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக மலேஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிடுகையில்; மனிதாபிமான உதவி, நிவாரணச் சேவை என்பவற்றுக்கு பொதுவான ஸ்தாபனம் அமைக்கப்படவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

இக்கருத்தை நியுஸிலாந்து வெளிநாட்டமைச்சரும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறான பொதுவான நிலையம் ஒன்றை அமைக்க ஏசியான் மாநாடு அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

2008ம் ஆண்டு மியன்மாரில் ஏற் பட்ட பெரும் இயற்கை அனர்த்தங் களுக்காக வெளிநாடுகள் ஏராள மான நிவாரணப் பொருட்கள், நிதியுதவிகளை வழங்க முன்வந்தன. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மியன்மார் அரசு மறுத்தது. ஏசியான் அமைப்பு இவ்விடத்தில் மியன் மாரை வழிக்குக்கொண்டு வரத் தவறியது.இதனால் பெருந் தொகை யினோர் பலியாகினர்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»