வரு. 78 இல. 170

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 10
விகிர்தி வருடம் ஆடி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, JULY 22, 2010

நீளம் பாய்தல் போட்டி அட்டாளைச்சேனை மாணவன் சாதனை

நீளம் பாய்தல் போட்டி அட்டாளைச்சேனை மாணவன் சாதனை

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி மாணவன் எம். ஐ. மிப்ரான் அண்மையில் இடம்பெற்ற கனிஷ்ட தேசிய சம்பியன் போட்டியில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் 6.47 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கம் பெற்றமையை பாராட்டி சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஐ. எம். முஸ்தபா மிம் விளையாட்டு ஆய்வு நிலையம் சார்பில் பதக்கம் அணிவித்து கெளரவித்தார்.

பாடசாலை பிரதி அதிபர் எம். அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய முஸ்தபா விளையாட்டுத் துறையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பெரும் பங்காற்றி வருவதை அறிவோம்.

மாகாணப் போட்டிகளில் மட்டுமல்ல அகில இலங்கைப் போட்டிகளிலும் சாதனை படைத்து வரும் இப்பாடசாலை பாராட்டுக்குரியதா கும். இந்நிலையில் இப்பாடசாலையின் அதிபர் உடற் கல்வி ஆசிரியர்கள் பாராட்டுக்கும் கெளரவத்துக்குமுடையவர்கள் எனவும் முஸ்தபா குறிப்பிட்டார். (ஐ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»