வரு. 78 இல. 170

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 10
விகிர்தி வருடம் ஆடி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, JULY 22, 2010


தமிழைச் சரியாக எழுத சபதம் ஏற்போம்

தமிழைச் சரியாக எழுத சபதம் ஏற்போம்

தமிழ் மொழியின் வளர்ச்சியை ஊக்குவிப்ப தற்காகப் பல மகாநாடுகளும் விழாக்களும் கால ங்காலமாக நடைபெற்று வருகின்றன. தமிழாராய் ச்சி மாநாடு முதல் கல்முனையில் நடைபெற்ற தமிழ் செம்மொழி விழா வரை தமிழ் மொழியின் வளர்ச் சியை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டவை.

தங்கள் சுயநல நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தமிழின் பெயரால் மகாநாடு நடத்துபவர்களும் இல்லாம லில்லை. அந்த மகாநாடுகள் பற்றித் தமிழ் கூறும் நல்லுலகம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.

தமிழின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நடைபெறும் மகாநாடுகளிலும் விழாக்களிலும் தமிழின் தொன்மை பற்றியும் செழுமை பற்றியும் பெரிதாகப் பேசுகின்றார் கள். அவற்றைக் கேட்கும் போதெல்லாம் தமிழர்கள் மாத்திரமன்றித் தமிழ் மொழியில் பற்றுள்ள அனைவ ரும் நிச்சயம் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அதே நேரம் சமகாலத் தமிழ்ப் பாவனை மகிழ்ச்சியைத் தருவதாக இல்லை.

ஒரு மொழியின் உயிர்நாடி அதன் இலக்கணம். இல க்கியத்திலிருந்து இலக்கணம் பிறந்ததெனக் கூறுகி ன்ற போதிலும், மொழியின் செம்மை குன்றாதிருப்பத ற்கு இலக்கணம் அவசியமாகின்றது. இன்று பலர் இல க்கண வழுவுடன் தமிழ் மொழியை எழுதுவதைக் காண முடிகின்றது. அடிப்படை இலக்கணமே தெரி யாமல் பலர் மொழியைக் கையாள்கின்றனர். பெரும் பாலானோர் ஒருமை, பன்மையைக் கூடச் சரியாகக் கவனிப்பதில்லை.

பன்மையில் ஆரம்பித்து ஒருமை யில் முடிக்கின்றார்கள். பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் வானொலிச் செய்திகளிலும் ஏராள மான இலக்கணப் பிழைகளை அவதானிக்க முடிகின் றது. மொழிபெயர்ப்பிலும் பல பிழைகள் இடம்பெறு கின்றன. upணீountry train sலீrviணீலீ என்பது மேல் நாட்டுப் புகையிரத சேவை என மொழிபெயர்க் கப்பட்ட செய்தியறிக்கை சில மாதங்களுக்கு முன் ஒரு வானொலியில் ஒலிபரப்பாகியது.

ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகவியலாளர்கள் வகி க்கும் பாத்திரம் முக்கியமானது. அதே போல, மொழி யின் வீழ்ச்சியிலும் அவர்களின் பாத்திரம் முக்கியமா னது. பத்திரிகைகளை வாசிப்பதன் மூலமும் தொலை க்காட்சி மற்றும் வானொலிச் செய்தியறிக்கைகள் மூல மும் ஒருவர் தனது மொழி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதே நேரம், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தியறிக்கைக ளிலும் இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது ஒருவ ரின் மொழி அறிவு வீழ்ச்சி அடைவதற்குக் காரண மாகிவிடலாம்.

மொழி வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்க வேண்டிய ஊடகங்களிலேயே இலக்கணப் பிழைகள் இடம்பெறு வது மிகவும் கவலைக்குரிய விடயம். ஊடகங்களில் தமிழைப் பிழையாக எழுதுவதும் கையாள்வதும் தமிழ் மொழிக்குச் செய்கின்ற துரோகம் என்பதை நாம் புரிந்துகொண்டு இலக்கணப் பிழை இல்லாமல் தமிழை எழுத வேண்டும்.

ஊடகங்களில் மாத்திரமன்றி வேறு துறைகளிலும் தமிழ் பிழையாக எழுதப்படுவதைக் காண முடிகின்றது. சில பட்டதாரிகள் கூட இலக்கண சுத்தம் இல்லாது எழு துகின்றனர். ஊடகங்களில் என்றாலென்ன வேறு துறை களில் என்றாலென்ன தமிழைக் கையாள்கின்ற அனை வரும் தமிழாலே வளர்வதோடு தமிழை வளர்க்கவும் வேண்டும். எனவே, தமிழைச் சரியாக எழுதச் சபதம் ஏற்போம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.