வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

செயற்கை ‘கண்’

செயற்கை ‘கண்’

மனித உறுப்புகளுள் மிக முக்கியமானது கண். இதிலுள்ள ‘கார்னியா’ எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின் போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு.

உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச் சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள் மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவதில் நீண்ட காலத்திற்கு செயலாற்ற கூடியது.

முதலில் பல்வேறு வகையான சிறப்பு பலிமர்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத் தூண்டி, பார்வையை எற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3 ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு மாத்திரை

நீரிழிவு நோயாளிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள். சிறுநீரகம் சரியாக சுத்திகரிப்பு பணியைச் செய்யாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நிறைய சத்துகள் உடலில் இருந்து கழிவாக வெளியேறுவதால் நீரிழிவு வியாதி நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேவையற்ற உப்புச் சத்துகள் உடலில் படிவதே இந்த வியாதி ஏற்பட காரணமாகும்.

இதைக் கட்டுப்படுத்த நவீன மாத்திரை உருவாக்கப்பட்டு உள்ளது. சிறிய பிளாஸ்டிக் மாத்திரையான இதை உடலில் தோலுக்கு அடியில் வைத்து தைத்து விடுவார்கள். இது ரத்த ஓட்டம் மற்றும் உடலுறுப்புகளில் தேவையற்ற உப்புகள் படிவதை கண்காணித்து தடுக்கிறது.

பொதுவாக யூரிக் ஆசிட் என்னும் உப்புத் தன்மை மிக்க ரசாயனம் சிறுநீரகம் மற்றும் மூட்டுகளின் இணைப்பு பகுதியில் படிக்கி றது. இதற்கு ‘யூரேட் ஆக்சிடேஸ்’ என்ற நொதி காரணமாக இருக்கிறது. இந்த உப்பு படிவு காரணமாக வாதநோயன், நீரிழிவு, உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

நீரிழிவு மாத்திரையை உடலில் பொருத்திக் கொண்டால், உப்புப் படிவுகள் கண்காணிக்கப்பட்டு இந்த மூன்று பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவு ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்களால் பாதிப்பு

இசையை ரசிக்காதவர்கள் யாருமில்லை. தினமும் பாட்டுக் கேட்கும் பழக்கம் பெரும்பா லானவர்களுக்கு உண்டு. சிலருக்கு பாட்டுக் கேட்காமல் தூக்கம் வராது. இன் னும் சிலருக்கு வேலையே ஓடாது. அதனால் தான் பாடல்களை ஒலிபரப்பும் பண்பலைகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

பாடல்கள் உற்சாகம் தரக்கூடிவை. அதிக நேரம் பாட்டுக் கேட்பதும் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டு இருப்பதும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாணவர் மிக்நல்லி, பி.எச்.டி. படிப்பிற்காக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார். 100க்கும் மேற்பட்ட சிறந்த ‘பாப்’ இசைப் பாடல்களை, இசை உலகைச் சார்ந்தவர்கள் மற்றும் இசை உலகம் சாராதவர்களை கேட்கச் செய்து ஆய்வு நடந்தது.

ஆய்வில் விருப்பமான பாடல்களைக் கேட்பது மனச்சோர்வில் இருந்து விடுவிப்பது, சில மோசமான நினைவுகளை மறக்கச் செய்வது, சில எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்றவற்றில் துணைபுரிவது தெரியவந்தது.

பாடல்களை கேட்பதால் 2 பாதிப்புகள் ஏற்பகிறது என்பதுதான் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விஷமாகும். அதாவது பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பது ஒருவித மன அழுத்தத்தை தருகிறதாம். மேலும் தொடர்ந்து பாட்டுக் கேட்பது காதைப் புண்ணாக்கும் ‘இயர்வோர்ம்’ என்னும் பாதிப்பு ஏற்படவும், இதன் விளைவாக சோர்வு ஏற்படவும் காரணமாக இருப்பது தெரியவந்தது.

சிரிப்பிற்கு ஆபத்து

நீங்கள் நொறுக்குத் தீனிப் பிரியர்களா? இரவில் தூங்கும் முன் ‘சினாக்ஸ்’ சாப்பிடுவது உங்கள் புன்னகைக்கு ஆபத்து என்கிறது புதிய ஆய்வு.

சிலர் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். நொறுக்குத் தீனி பிரியர்களான இவர்களுக்கு புதிய ஆய்வு முடிவு சற்று அதிர்ச்சியை தருகிறது.

நொறுக்குத் தீனி உடல்பருமனுக்கு காரணமாக, இருக்கிறது. அதேபோல் இரவு சாப்பாட்டிற்குப் பின்பு நொறுக்குத் தீனி தின்பது பற்களுக்கு கேடு விளைவிக்கிறது. அதாவது உணவுத் துணுக்குகள் பற்களிலேயே தங்கிவிடுவதால் நுண்கிருமிகள் பற்களை தாக்குகிறது. இதன் காரணமாக பற்கள் சீக்கிரமாக பாதிப்படைந்து சிதைகிறது. இதனால் அவர்கள் விரைவில் பொலிவான புன்னகையை இழக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

டென்மார்க் நாட்டின் கோபன்கேகன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு இதைக் கண்டு பிடித்துள்ளது. ‘பகலில் நொறுக்குத் தீனி தின் பதைவிட இரவில் சாப்பிடும் பண்டங்கள்தான் இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே இரவு உணவுக்குப் பிறகு நொறுக்குத்தீனி தின்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தூங்கச் செல்லும் முன் மீண்டும் பல் துலக்கு வது நல்லது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •