புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

ஆசிரியர்கள் கற்பித்தலை தொழிலாகச் செய்யாமல் பின்தங்கிய சமூகத்தின் விடிவுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும்

ஆசிரியர்களும் பெருந்தோட்டச் சமூகமும்:

ஆசிரியர்கள் கற்பித்தலை தொழிலாகச் செய்யாமல் பின்தங்கிய சமூகத்தின் விடிவுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும்

பெருந்தோட்ட பிரதேசத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது பாடங்களில் 100 சதவீதப் பெறுபேற்றைப் பெற்றுக் கொடுக்கின் றார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களில் உள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பெருந்தோட்டப் பிரதேச பாடசாலைகளில் இன்னும் பல்வேறு குறைபாடு கள் பல்வேறு மட்டங்களில் காணப்படுவதை அவதானிக்கலாம். பாடசாலைகளில் வகுப்பறை கற்பித்தல் நடைபெறுகின்றதே தவிர தனியான வகுப்பறை கற்றல், கற்பித்தல் நடை பெறு வதில்லை.

ஒவ்வொரு மாணவனையும் கவனத்தில் எடுத்து அந்த மாணவனின் உடல் உள தேவை களை அறிந்து அறிவு, திறன், மனப்பாங்கு என் பவற்றை கவனத்தில் கொண்டு படிப்பிக்கத் தொடங்குகின்றார்களோ அன்றுதான் அந்த வகுப்பிலுள்ள சகல மாணவர்களும் சிறப்பாக கற்பார்கள்.

சில ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்போடும், சேவை மனப்பாங்கோடும் கற்பிப்பதை காண முடிகின்றது. இவ்வாறான ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள், பெற்றோர், பழைய மாணவர்கள், சமூகத்திலுள்ளவர்கள் ஊக்குவித்து பாராட்டி கெளரவிக்க வேண்டும்.

ஆசிரியர் சேவையானது ஒரு சமூக ரீதியான சேவையாக இல்லாமல் ஒரு தனிமனித முன் னேற்ற வியாபார ரீதியான சேவையாக மாறிக் கொண்டு வருகின்றது. தனியார் கல்விக் கூடங் கள் பல்கி பெருகி விட்டன. ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்கள் பணத்தையே மையமாகக் கொண்டு கற்பிக்கின்றார்கள். அந்நிறுவனங்களுக்கு மாணவர்களின் ஒழுக்கம், முன்னேற்றம் என் பவற்றை கவனிப்பது மிகவும் குறைவு. தனக்கு வருமானம் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் கற்பிக்கின்றார்கள.

நகரங்களைப் போன்று பெருந்தோட்டப் பகுதிகளிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் 1-13 வரையான மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு பாடத்திற்கு 300 ருபா தொடக்கம் 1000 ரூபா வரை கட்டணங்களாக அறவிடப்பட்டு தனியார் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படு கின்றன. ஆனால் இந்த பணத்திற்கான சேவை யானது அனைத்து மாணவர்களுக்கும் சென்ற டைகின்றதா? என்பது கேள்விக்குறியே.

சில ஆசிரியர்கள் தங்களுடைய தனியார் வகுப்புக்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக கற்பிப்பதாகச் சொல்லப்பட்டாலும் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங் கிலம், தமிழ் மொழி, வரலாறு ஆகிய பாடங்களில் சித்தி பெறுகின்ற சத வீதம் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

சில ஆசிரியர்கள் தங்களுடைய தனியார் வகுப்பிற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை பாடசாலையில் தங்களுடைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு கொடுப்பது இல்லை. ஒரு சில ஆசிரியர்கள் பாடசாலையை ஒரு பகுதி நேர தொழிலாகவும், தனியார் வகுப்புக்களை முழு நேர தொழிலாகவும் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். பாடசாலையிலேயே அவர் களுடைய தனியார் வகுப்பிற்கான சகல விடயங் களும் ஆரம்பிக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பெருந்தோட்டத் துறை பெற்றோர் தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு அனுப் பினாலும் கற்பிக்கும் ஆசிரியர்களுடைய கல் வித் தகைமைகள், தகுதி, கற்பித்தல் அனு பவங்கள், கற்பித்தல் முறை, போன்றவற்றை ஆராய்வது இல்லை.

பெருந்தோட்டப் பிரதேசத்தில் பல நல்ல தகுதியான தனியார் கல்வி நிறுவனங்கள் உரு வாக வேண்டும். இதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வெளியேறிய மாணவர் களையும், பிரதேசத்திலுள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களையும் இணைத்து கொண்டு பல தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறக் கூடிய தனியார் கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் பெற்றோர்க ளுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி யின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை பெருந்தோட்டப் பிரதேசங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சிலர் தாய் மொழிப் பாடத்தில் கூட சித்தி பெறத் தவறி விடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையின் கல்வி கொள்கைப்படி பல்வேறு கற்பித்தல் முறைகள் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணம் 5ஷி கற்பித்தல் முறையை குறிப்பிடலாம் இந்த முறையை பயன்படுத்தி பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இம் முறையைப் பற்றிய பூரணமான அறிவு இல்லாமையினால் அவர்கள் எல்லா பாடங்களையும் வாசித்து விளங்கப் படுத்துவதை தவிர புதிய கற்பித்தல் முறை களை காண முடியாதுள்ளது.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 2020 இல் தரம் 5, க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளை 50% சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதற்கு இப்போதிலிருந்தே பாடசாலை மட்டத்தில் நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

பெருந்தோட்ட பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் சங்கங்கள், பட்டதாரி ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ரீதியான அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெருந்தோட்டப் பாடசாலை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் (ஜிlantation ஷிணீhool ரினீuணீation ளிலீvலீlopசீலீnt ஷிoணீiலீty) ஒன்றினை உருவாக்க வேண்டும்.

இவ் ஒன்றியத்தின் மூலம் பெறுபேற்றையும், மாணவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனை, தொழில் வழிகாட்டல் செயலமர்வுகளை நிபுணத் துவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு தொடர்ச்சி யான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தரம் 5 க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கான விஷேட வகுப்புக்களையும், செயவமர்வுகளையும், பாடங்களுக்கான வகுப்பறை முகாம்களையும், கருத்தரங்குகளையும் நடாத்த வேண்டும். ஒரு சமூகத்தின் வெற்றிக்கு ஆசிரியர்களுடைய பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்கும் போதே, அச்சமூகம் ஏனைய சமூகங்களோடு சரிநிகர் சமமாக வாழ முடியும்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபர்களும் தங்களுடைய மூகப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே கற்பித்தல் தொழிலை ஒரு தொழிலாக செய்யாமல் ஒரு பின் தங்கிய சமூகத்தின் விடிவுக்காக சேவை யாற்ற முன் வர வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.