ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

'டொலர்' என்ற பெயர் உருவான வரலாறு!

'டொலர்' என்ற பெயர் உருவான வரலாறு!

இப்போது செகோஸ்லோவாகியா குடியரசில் உள்ள சங்கிட் ஜோசிம்ஸ்தல் என்ற நகரம் முன்பு ஜெர்மனியில் இருந்தது. அங்கு 1516 இல் ஒரு வெள்ளிச் சுரங்கம் அமைக்கப்பட்டது.

(செயின்டு ஜோசியம் என்பவர் செயின்டு ஆனின் கணவரும் வெர்ஜின் மேரியின் தந்தையும் ஆவார்) ஜெர்மானிய மொழியில் தால் என்பதற்கு பள்ளத்தாக்கு என்பது பொருள். அந்த இடம் தாலோ என்று அழைக்கப்பட்டது.

வெள்ளிச் சுரங்கத்தில் அடிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் தாலேர்கள் என்று குறிப்பிடப்பட்டன. 1600 களில் ஆங்கிலத்தில் அது டாலர் என்று மொழிபெயர்க்கப்பட்டது. அது ஜெர்மானிய அல்லது வேறு எந்த வேற்று நாட்டு நாணயத்தையும் குறிப்பதாக ஆயிற்று. ஸ்பானியர்களின் பெஸோதான் டாலர் என்று அழைக்கப்பட்ட முதல் வேற்று நாட்டு நாணயமாகும்.

குடியரசுத் தலைவராக இருந்த தாமஸ் ஃபர்ஸன் “யு. எஸ. ஸின் பண அலகு 1 டாலர்” என்று 1785 இல் குறிப்பிட்டார். 1784 இல் தாமஸ் ஜெஃபர்ஸன் 5 என்ற எழுத்தின் மீது இரு கோடுகளைப் போட்டு டாலர் என்பதைக் குறித்தார்.

அமெரிக்க நாணயத்தின் முதன்மை அளவை டாலர் என்று கூறினார். இதற்கு முன்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இக்கறி பெசோ என்ற அவர்கள் நாணயத்தைக் குறிப்பிட்டது. அதன் பின்னர் ஹெர்குலிஸின் இரட்டைத் தூண்கள் ஓலைச்சுருளால் மூடியது போன்று (5) டாலர் குறி பண்டய ஸ்பானிய மொழியில் எட்டின் துண்டுகளின் மீது குறிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி