ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

சமிக்ஞை விளக்குகளுக்கு ஏன்

சமிக்ஞை விளக்குகளுக்கு ஏன்

சிவப்பு
பச்சை
மஞ்சள்

நிறங்கள் பயன்படுத்த படுகின்றன?

19 ஆம் நூற்றாண்டில் ரயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.

பயங்கரமான விபத்துக்களையும் ஒன்றோடொன்று மோதுவதைத் தவிர்க்கவும் ரயில்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை தேவைப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே சிவப்பு வண்ணம் அபாயத்தைக் குறிப்பதற்கான குறியீடாகப் பயன்படுவதால் நிறுத்துவதற்குச் சிவப்பு வண்ணம் என்பது எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1830 களில் எச்சரித்துப் பின் போவதற்குப் பச்சை வண்ணத்தை பயன்படுத்த என்ஜினீயர்கள் முயற்சித்தனர். ஆனால் சூரிய வெளிச்சம் படும்போது இவை தவறான சின்னல்களைப் பிரதிபலித்தன.

அதனால் எச்சரிப்பதற்கு மஞ்சள் வண்ணத்தையும், செல்லலாம் என்பதைத் தெரிவிக்கப் பச்சை வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். முதல் முதலாக ஒஹியோவிலுள்ள க்Zவ்லாந்தில் இந்தப் போக்குவரத்து விளக்கு முறை 1914 இல் பயன்படுத்தப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி