புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
தோல்விக்கு அஞ்சும் மஹிந்த இனவாதத்தை தூண்டுகிறார்

தோல்விக்கு அஞ்சும் மஹிந்த இனவாதத்தை தூண்டுகிறார்

பிரதமர் ரணில் குற்றச்சாட்டு

தோல்விக்கு அஞ்சும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே இனவாதத்தை தூண்டி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வியைக் கண்ட மஹிந்த இன்று தான் செய்தவற்றை மறந்தும், மறைக்கவும் இனவாத அடிப்படையில் செற்படுகின்றார். வடக்கு கிழக்கை துண்டாக பிளவடையச் செய்ய நான் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த பொய்யுரைத்து வருகிறார். அவர் செய்த தவறுகளை பட்டியலிட்டால் அவரால் எதிர்காலத்தில் அரசியலே செய்ய முடியாது போய்விடும். ஆனால் அவரைப் போன்று அநாகரிகமாகச் செயற்பட நான் தயாரில்லை.

2005 ஆம் ஆண்டில் தமிbழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டு புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா பணம் வழங்கியே மஹிந்த அன்றைய தேர்தலில் வெற்றியீட்டினார். அன்று பிரபாகரன் எனக்கும் ஓர் தகவலை அனுப்பி வைத்திருந்தார்.

மஹிந்தவை விடவும் அதிகளவு பணம் வழங்கினால் எனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என பிரபாகரன் எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

கூடுதல் பணத்தை வழங்கி ஒப்பந்தமொன்று கைச்சாத்திட்டால் வெற்றிக்காக செயற்படத் தயார் என பிரபாகரன் கூறியிருந்தார். நான் பிரபாகரனுடன் எந்தவிதமான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட விரும்பவில்லை. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என நான் எனது கொள்கைகளுடன் இருந்தேன். 2005 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது மஹிந்த பணம் வழங்க இணங்கியுள்ளார்.

நீங்கள் அதனை விட பணம் வழங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையச் செய்ய முடியும் என பிரபாகரன் தகவல் அனுப்பி வைத்திருந்தார். பிரதமராக கடமையாற்றிய அந்தக் காலத்தில் நான் பிரபா கரனுக்கு கடிதம் அனுப்பக்கூட கையொப்ப மிட்டதில்லை. மஹிந்தவின் கோரிக்கைக்கு அமைய அப்போதைய பிரதமரின் சார்பில் மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி ஆகியோரே பிரபாகரனுடன் பேசினார்கள். ஒப்பந்தமொன்று கைச்சாத்திட்டு 200 மில்லியன் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் பிரபாகரன் தமிழ் மக்கள் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிப்பதனை தடுத்தார்.

நான் பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட விரும்பவில்லை. தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என நான் எனது கொள்கைகளுடன் இருந்தேன். புலிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது யார் என்பதனை காலையில் எழுந்து கண்ணாடியின் எதிரில் சென்று பார்த்தால் குற்றம் சுமத்துவோருக்கு தெரியும் யார் குற்றவாளிகள் என்பது. மஹிந்த ராஜபக்ஷ ராடா நிறுவனத்தின் ஊடாக 200 மில்லியன் புலிகளுக்கு வழங்கினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.