புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

நீலாம்பரி

நீலாம்பரி

முகில்வண்ணன்

(சிறுவர் நவீனம்)

 (சென்றவார தொடர்)

“எனக்கு இறக்கைகள் மட்டும் கிடைத்தால் போதும் நான் போய்விடுவேன்” என்றான்.

“நீ இப்போது எங்கள் குடும்பத்தில் ஒருவனாகி விட்டாய். நீ சாப்பிடாமல் நாங்கள் சாப்பிடுவது எங்கள் விருந்தோம்பும் முறைக்கும் விரோதமானது. முதலில் நீ சாப்பிட்டு விட்டு தூங்கு. மிகுதியை நாளை பார்க்கலாம்” என்றார்.

அது தான் சரி என்பதைப் புரிந்து கொண்டான். அவனுக்கும் களைப்பாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் ஒரு மரத்தடியில் தூங்கினான். நாளை இவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? என்ற யோசனையுடன் தூங்கிப் போனான்.

அதிகாலையில் குருவிகள் கீதம் இசைத்து அவனை எழுப்பிவிட்டது. புத்துணர்ச்சியுடன் எழும்பினான். அவர்கள் இன்னும் எழும்பக் காணோம். குருவிகளின் அழகையும் அவற்றின் விதம் விதமான இசையையும் கேட்டு இரசித்துக் கொண்டிருந்தான். அப்போது பெரியவர் வெளியே வந்தார். வர்மனை அழைத்தார். “இப்போது என்ன முடிவு எடுத்திருக்கிறாய்” என்று கேட்டார்.

“ஐயா பெரியவரே நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நான் பல நாட்களாக நீரின்றி அலைந்து திரிந்தேன். நீரைக் கண்டதும் ஆர்வத்துடன் தடாகத்தில் இறங்கினேன். அங்கு யாரும் இருப்பது எனக்குத் தெரியவில்லை. நீரை அள்ளி முகம் கழுவினேன். அப்போது ஒரு சலசலப்புக் கேட்கவே பார்த்தேன். கண்களில் நீர் நிறைந்திருந்ததால் ஒன்றும் தெரியவில்லை.”

“கண்களைத் துடைத்து விட்டுப் பார்த்தபோது ஒரு பெண் எனது இறக்கைகளை எடுத்துக் கொண்டு ஓடுவதைத் தான் கண்டேன். அது தான் பின் தொடர்ந்து ஓடி வந்தேன். இது சத்தியம். (தொடரும்...)

இதை விட வேறு உண்மை எதுவும் இல்லை. என்னை நம்புங்கள். நான் ஒரு பெரிய புண்ணிய காரியமாக வந்திருக்கிறேன். என்னைப் போக விடுங்கள்” என்று கெஞ்சினான் வர்மன்.

“புருஷிமா” என்று அவளை அழைத்த அவர். “அது என்ன புண்ணிய காரியம்?” என்று கேட்டார்.

வர்மன் ஆதியோடு அந்தமாக முழுவதையும் கூறி முடித்தான். அந்தப் பெண்ணும் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

“புருஷிமா நீ என்ன சொல்கிறாய்?” என்று அவளிடம் கேட்டார்.

“அப்பா, நான் இரவு முமுவதையும் காட்சியாகக் கண்டேன். அவரில் எந்தத் தவறும் இல்லை. அவரைப் போக விடலாம். அதுமட்டுமல்ல அவர் செல்லும் பயங்கரமான பயணத்திலும் நானும் உதவியாகச் செல்லப் போகிறேன். தேவையான இடத்தில் அவர் என்னை மனைவி என்று கூறலாம்”

“புருஷிமா நீ என்ன கூறுகிறாய்?” என்றார்.

“ஆமாம் அப்பா. ஒரு முனிவர் என் காட்சியில் வந்து அவனைத் தடுக்காதே முடிந்தால் உதவி செய். என்று கூறினார். திரும்பும் வழியில் நான் இங்கே வந்து விடுவேன்” என்றாள்.

சற்று நேரத்தில் அவளும் தோளில் ஒரு முடிச்சுடன் வந்தாள். அவனிடம் மன்னிப்புக் கேட்டாள். நாங்கள் இருவரும் இனி நல்ல நண்பர்கள் என்று கை கோர்த்துக் கொண்டனர். அவனுடைய இறக்கைகளைக் கொடுத்து விட்டு தனது இறக்கைகளையும் அணிந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் நண்பர்களாகச் செல்லும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார் அவளுடைய தந்தை.

சிறிது தூரம் சென்றதும் தன்னால் அடக்க முடியாத சந்தேகத்தைக் கேட்டான்.

அதென்ன “புருஷிமா” அப்படி என்றொரு பெயர்?”

“அது எங்கள் ஊர் வழக்கப் படியானது. அதன் அர்த்தம் “மலர் போன்றவள்” என்பதாகும். என்றாள்.

“உண்மைதான் மலர் போன்று தான் இருக்கிaர்கள். நான் பார்த்த போது தடாகத்தில் மலர்களைத் தான் கண்டேனே தவிர உங்களைக் காணவில்லை” என்றான்.

இவ்வாறு சிறிது கதைத்துக் கொண்டு வந்தவர்கள். “நாகலோகத்துக்குச் செல்ல இரண்டு நாள்களாவது செல்லும். நாம் பறந்து செல்வோம்” என்றாள்.

இருவரும் இறக்கைகளை மாட்டிக் கொண்டு பறக்கத் தொடங்கினார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.