புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
சர்வதேசத்தில் எமது தாய் நாட்டை அவமானப்படுத்த சிலர் சூழ்ச்சி!

சர்வதேசத்தில் எமது தாய் நாட்டை அவமானப்படுத்த சிலர் சூழ்ச்சி!

இனப்பாகுபாடிற்கு இடமளிக்கக் கூடாது என்கிறார் நாமல் ணிஜி

சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம் என பாகுபாடு காட்டாமல் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் சமமாக மதிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையை அவமானப்படுத்த நினைப்பவர்கள் கெட்ட எண்ணத்துடன் இதனை பயன்படுத்துகின்றனர். இதற்கு எதிரான நாம் போராட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் இளைஞர்கள் சிங்கள இளைஞர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த சோகமான நிலையை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான விஜயத்தின் மூலம் அறிய முடிந்தது.

பயங்கரவாதத்தின் ஊடாக எல். ரி. ரி. ஈயினரால் தமிழ் இளைஞர் சமூகத்திற்கு செய்ய முடிந்தது இது மாத்திரமே ஆகும். சிங்கள இளைஞர்கள் தமிழ் கற்கவேண்டும். அதே போன்று தமிழ் இளைஞர்கள் சிங்களம் கற்க வேண்டும்.

அவ்வாறில்லாவிட்டால் பொது மொழி ஒன்றின் ஊடாக இரு சமூகத்தினரும் தொடர்புகொள்ள வேண்டும். இதற்காக இரு சமூகத்தினரும் சர்வதேச மொழியாகிய ஆங்கிலத்தை கற்க வேண்டும்.

இது இரண்டு சமூகத்தையும் இணைப்பதற்கு முன்னிற்கும். இளைய சமூகத்தினர் மொழிகளை கற்றல் மிக முக்கியமாகும். அதேபோன்று தாய் நாட்டின் தேசிய மொழிகளை கற்பதற்கு இளைய சமூகத்தினர் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.

இது அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு மாத்திரம் உதவுவதில்லை. இனங்களுக்கிடையில் நல்லெண்ண தூதுவர்களாக செயற்படுவதற்கும் உதவும். இதற்காகவே ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ 2021ம் ஆண்டில் நாட்டில் சகலரும் மும்மொழி பேசுபவார்களாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் ஏனைய சமூக மாணவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டும். நாடு ஒற்றுமைப்படுவதற்கு பாடசாலைகளே சிறந்த இடமாகும். இளைஞர்களே நாட்டின் இரத்தங்களாகும். இதனால் நாட்டை வெற்றி பாதையில் கொண்டு செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பவர்களும் இளைஞர்களே. எதிர்காலத்தில் நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒரு போதும் இளைஞர்கள் முன்வரமாட்டார்கள்.நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.