புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

story

சீதில் ஒரு தங்கத் துணியில ஒரு முடிச்சு இருந்தது. அதை எடுத்த அரசன். “இதில் தங்கத் தானியம் இருக்கிறது. இதைப் பெருக்கிக் காட்டினால் நீங்கள் இங்கே வாழலாம். இல்லை யேல் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். இதற்கான கால அவகாசம் மூன்று மாதம். அதுவரை நீங்கள் தங்க தற்காலிக இருப்பிடமும் உணவும் தரப்படும்”என்றான்.

அதை வாங்கிக் கொண்ட விமலதர்மராஜன் யோசனையோடு இருப்பிடத்துக்கு வந்தான். அதுவும் ஒரு மாளிகையாகவே இருந்தது.

காவலர்கள் “உங்களுக்கு என்ன உதவி தேவையோ அவற்றைக் கேட்டால் செய்து கொடு க்கும் படி மன்னன் உத்தரவு” என்றார்கள். அதில் இல்லாதது எதுவும் இல்லை. அதில் இருக்கும் தங்கம் வெள்ளி இரத்தினங்களை எடுத்தாலே சீவியத்துக்கு வாழலாம் போல் தோன்றியது.

வீட்டைப் பார்த்து வியந்து நின்ற அவர்கள் வேறு எதையும் கேட்கவில்லை. இது தற்காலிக இருப்பிடம் என்றால் சொந்த இருப்பிடம் எப்படி இருக்கும்? என்பதே அவர்கள் வியப்பாக இரு ந்தது.

தங்கத் தானியமும் விளைந்து மகசூலைத் தருமா? என்ற யோசனையில் அன்றைய பொழுதைப் போக்கினான். அடுத்த நாள் தனக்கு தங்கத் தானியத்தை விளைவிக்கும் வயலைக் காட்டச் சொல்லிக் கேட்டான். வயலுக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். அது பதப்படுத்தப்பட்டிருந்தது. இன்றும் விதைக்க ஆயத்தமாக இருந்தது. தான் எதையும் செய்யத் தேவையில்லை. விதைப்பது மட்டும் தான் தன் வேலை. ஆகவே இனியும் தான் தாமதிக்கக் கூடாது. என்று எண்ணிக்கொண்டு தனது மாளிகைக்கு வந்து சேர்ந் தான்.

பாலகுமாரன் ஞாபகத்துக்கு வந்தான். அந்தத் தானியத்தை எடுத்து ஒரு தாம்பாளத்தில் வைத்துக் கொண்டு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தான். அடுத்த நாள் விதைக்க வேண்டும் என்று காவலர்களிடம் கூறினான். அவர்களும் “சரி” என்றார்கள்.

“இப்படி எத்தனை பேர் விதைத்து விட்டுப் போனவர்கள்?" என்பது தான் அவர்கள் எண்ணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

அன்று விமலதர்மராஜன் அள்ளி அள்ளி விதை தானியத்தை எறிய எறிய தாம்பாளத்தில் அதே அளவு தானியம் இருந்ததைப் பார்க்க அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் இந்த ஆச்சரியத்தில் மூழ்கி இருக்க முழுத் தானியத்தையும் வயலில் எறி ந்து விட்டு வெறும் தாம்பாளத்துடன் வெளியேறினான் விமல தர்மராஜன்.

காவலர்களுக்கு வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது. அரசனுக்கு தகவல் பறந்தது. அரசனும் வியப்படைந்தான். எதற்கும் இருந்து பார்ப்போம் என்றிருந்தான். தகவல் எங்கும் பரவியது. ஊர் மக்கள் கூடிப் புதினம் பார்த்தனர்.

எவரும் எதிர்பார்க்காத வரையில் மூன்று நான்கு நாட்களில் முளை வந்த பயிர் எழும்பியது. அதுவும் கூட தங்கநிறமாகவே இருந்தது. தங்கப் பயிர் நாள் செல்லச் செல்ல பெரிதாக வளர்ந்தது.

45 நாட்களுக்கு மேலாக வர பயிர் பழுத்து விட்டது என்று ஊரவர் வந்து கூறினர். ஆனால் அங்கு கூலி வேலை செய்வதற்கு எவருமே இல்லை எல்லோரும் செல்வந்தர்கள் என்றால் யார் கூலி வேலை செய்யப்போகிறார்கள்? அவர்கள் குடும்பமே எல்லோரு மாகச் சேர்ந்து பயிரை ஒவ்வொன்றாகப் பிடுங்கி அதிலிருந்த தானியங்களை உருவி எடுத்துச் சேகரித்தார்கள். பயிரும் கூட தங்கமாக இருந்ததால் அதையும் சேகரித்தார்கள்.

அன்று முழுவதையும் சேகரிக்க முடியவில்லை. முழுவதையும் சேகரித்து தானியம் வேறாகவும் பயிர் வேறாகவும் சேகரித்து எடுத்தார்கள். எல்லாவற்றையும் சேகரித்து எடுத்த பின்னர் மன்னரிடம் சென்று தகவலைத் தெரிவித்தான்.

மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். மன்னனுக்கு அன்பளிப்பாக ஒரு மூடை தானியத்தைக் கொடுத்தான். மன்னன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

(தொடரும்...)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.