புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

பாடசாலைகளுக்கான சியெட்டின் வீதிப் பாதுகாப்புத் திட்டம்

பாடசாலைகளுக்கான சியெட்டின் வீதிப் பாதுகாப்புத் திட்டம்

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆரம்பித்த சமூக நலத்திட்டமான பாடசாலை சிறுவர்களுக்கான வீதிப் பாதுகாப்புத் திட்டம் அண்மையில் அதன் 50ஆவது மைல்கல்லை அடைந்துள்ளது. வீதிப் பாதுகாப்பு சமிக்ஞைகளை பாடசாலை சிறுவர்களும் பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இந்தத் திட்டமாகும்.

இதன் 50ஆவது வேலைத்திட்டம் கண்டி திரித்துவக் கல்லூரியில் இடம்பெற்றது. இங்கு வீதிப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு என்பன பற்றி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விளக்கிக் கூறினார். இவற்றை தினசரி தமது வாழ்நாளில் கடைப்பிடிக்க மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இவற்றுக்கு மேலதிகமாக பாடசாலைகளுக்கு பிள்ளைகளை ஏற்றி வரும் பணியில் ஈடு பட்டுள்ள சாரதிகளுக்கும் ஏனையவர்களுக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பில் அவர்களின் பொறுப்புக்கள் குறித்தும் அறிவூட்டப்பட்டது.

போக்குவரத்து சமிக்ஞையில் பயன்படுத்தப்படும் கூம்புகள், பாதுகாப்பு ஜெக்கட்டுக்கள், மற்றும் சமிக்ஞை உபகரணங்கள் உள்ளடங்களாக ஒரு தொகுதி பொருள்கள் சியெட் நிறுவனத்தால் பாடசாலை போக்குவரத்துப் பிரிவுக்கு வழங்கப்பட்டன.

“2011 புள்ளி விபரங்களின் படி 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் மரணத்துக்கான காரணிகளில் முதலிடம் வகிப்பது வீதி விபத்துக்கள் என்பது தெரியவந்துள்ளது. எமது கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும், அதிகமான வாகன ஓட்டுனர்களையும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை வழங்கி நாம் பாதுகாத்துள்ளோம். இது உயிர்களைக் காக்கவும் உதவும் என்று நாம் நம்புகின்றோம்” என்று கூறினார் சியெட் களனி ஹோல்டிங்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் ரவி தத்லானி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.