புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

இந்தியிலும் அசினே கதாநாயகி

எம்.குமரன் சன் ஒப் மகாலட்சுமி :

இந்தியிலும் அசினே கதாநாயகி

இந்தியில் உருவாகும் எம். குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்திலும் நடிகை அசினே ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.

தெலுங்கில் அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படம் தமிழில் எம். குமரன் சன் ஒப் மகாலட்சுமி என்ற பெயரில் ரிலிசாகி வசூலை வாரி குவித்தது.

இந்த படத்தை தற்போது அதன் ஒரிஜினல் இயக்குநரான பூரி ஜெகன்னாத் இந்தியிலும் எடுக்கப் போகிறார். படத்தின் நாயகியாக தமிழ் தெலுங்கில் நடித்த அசினே நடிக்கப்போகிறாராம். தெலுங்கில் வெளியான அம்மா நானா தமிழ் அம்மாயி படத்தை ஜெயம் ரவி, அசின் நடிக்க தமிழில் ரீமேக் செய்தார் ஜெயம் ராஜா.

படம் சூப்பர் ஹிட். அசினுக்கு இந்தப் படம்தான் முதல் தமிழ்ப் படம். இப்படத்துக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த அசின், பின்னர் நாளாக நாளாக வாய்ப்புகள் குறைந்த நிலையில் பொலிவுட்டுக்கு பறந்தார்.

இந்தியில் படமான கஜினி பெரும் ஹிட் ஆகி அசினுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை என்பது வருத்தம்.

இந்நிலையில்தான் மகாலட்சுமி இந்திக்கு போகும் தகவல் அசினுக்கு கிடைத்திருக்கிறது. உடனடியாக டைரக்டர் பூரி ஜெகன்நாத்தை அணுகிய அசின், இந்திப் படத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இந்தியில் தற்போது அமிதாப் பச்சனை வைத்து புத்தா ஹோகா தேரா பாப் படத்தை இயக்கியிருக்கும் பூரி ஜெகன்னாத், அதனைத் தொடர்ந்து தி பிசினஸ்மேன் என்ற படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் இயக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் அசினுடன் இந்தி மகாலட்சுமியில் இணையப் போகிறாராம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.