புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

இவ்வார பலன்

24.07.2011 முதல் 30.07.2011 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேடராசிக் காரருக்கு 3ம் இடத்து செவ்வாய் காரணமாக பெருமளவு பொருள் லாபம் கிடைக்கும். பரீட்சைகளிலும், வழக்குகளிலும் நல்ல பெறுபேறுகள் கிடைக்கும். தெய்வீக நாட்டம் கூடும். 4ம் இடத்து புதன் காரணமாக குடும்பத்தில் சுபகாரியம் நிகழும். சுக்கிரன் காரணமாக இனசன உறவுகள் மேம்படும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். பிரயாண ங்களுக்கு வாய்ப்புண்டு. மனதில் ஒருவித அச்சம் நிலவிக் கொண்டு இருக்கும். பெண்வழிவிரோதம் ஏற்படும். பயணங் களில் எச்சரிக்கை நன்று.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடபராசிக் காரருக்கு 2ம் இடத்து செவ்வாய் காரணமாக திருடர்களாலும், நெருப்பினாலும் ஒருவித பயம் ஏற்படும். அரசவழி உத்தியோகத்தர்கள் முன் கவனம் நன்று. 3ம் இடத்து புதன் காரணமாக அரசுவழி ஆதரவு குறையும். எதிரிகளின் கரைச்சலும் இருக்கும். மேலும் வெளிநாட்டு பிரயாணம் ஏற்படலாம். மனதில் கவலைகள் தோன்றும். நிலைமாற்றம் ஏற்படலாம். அளவுக்குமீறிய செலவு இருக்கும். திருமணத்தில் தகராறு ஏற்படலாம். காரியங்களுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். உடல் நலம் பாதிப்படையலாம்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக் காரருக்கு 1ம் இடத்து செவ்வாய் காரணமாக காரியங்களுக்கு தடை ஏற்படும். உடல் நலம் பாதிப்படை யலாம். எதிரிகளின் கரைச்சலும் இருக்கும். இரண்டாம் இடத்து புதன் காரணமாக தேவையில்லாத பெயர் கேட்க நேரிடும். கோபம் அதிகரிக்கலாம். மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றலாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். குழந்தைப் பாக்கியம் ஏற்படலாம்.


கடகம்


புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிக் காரருக்கு 12ம் இடத்து செவ்வாய் காரணமாக பெருமளவு செலவுகள் ஏற்படும். எதிரிகளின் கரைச்சலும் அதி கரிக்கும். கண்சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். இட மாற்றத்துக்கு வழியுண்டு. பெருமளவு பொருள் வந்து சேரும். பிள்ளைகளால் ஒருவித கவலை ஏற்படும். அலைச்சலுக்கு குறைவிருக்காது. உறவினர்களால் மனம் பாதிப்படையும். விருந்துக்கு குறைவிருக்காது. ஓரளவு பெண்வழி உதவி உண்டு.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரருக்கு 11ம் இடத்து செவ்வாய் காரணமாக பெருமளவு பணம் வவந்து சேரும். 12ம் இடத்து சுக்கிரன் காரணமாக ஆடைகளாலும், ஆபரணங்களாலும் லாபம் ஏற்படும். பிள்ளைகளால் மனதில் கவலை இருக்கும். மனதில் ஒருவித பயம் இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் இருந்து கொண்டிருக்கும். பரீட்சை, வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான காரியம் நிகழும்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக் காரருக்கு 10ம் இடத்து செவ்வாய் காரணமாக திருடர்களாலும், ஆயுதங்களாலும் ஒருவித பயம் மனதில் நிகழும். உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். 11ம் இடத்து சூரியன், புதன், சுக்கிரன் காரணமாக திடீர் யோகம் ஏற்படும். கால்நடை வளர்ப்போருக்கு லாபம். நினைத்த காரியம் ஓரளவு கைகூடி வரும். எல்லா காரியங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. செலவுக்கு குறைவிருக்காது.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலா ராசிக் காரருக்கு 9ம் இடத்து செவ்வாய் காரணமாக செலவுகள் கூடும். எதிர்பார்த்த முடிவுகள் வர தாமதமாகும். உடல் நலம் குறையும், பெண்வழியால் பிரச்சினை ஏற்படலாம். எடுக்கின்ற முயற்சிகள் நல்ல பலனை தரும். எதிர்பாராத பெண் நண்பர்கள் உதவுவர். பலவித கவலைகள் மனதில் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் கைகூடி வரலாம். குடும்பத்தில் சிறுசச்சரவு ஏற்படலாம். 9ம் இடத்து குரு மங்களகரமான காரியத்தை தரலாம்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக் காரருக்கு 8ம் இடத்து செவ்வாய் காரண மாக பயணங்களின் போது மிகவும் முன் கவனம் தேவை. பித்தம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். நிலையில்லாத முடிவுகளால் மனம் குழம்பும். தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மனைவியுடன் தகராறு ஏற்படலாம். எதிர்பாராத பெண் நண்பகர்கள் உதவலாம். சங்கடங்கள், கஷ்டங்கள், சச்சரவுகள் நிறைந்த வாரம்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக் காரருக்கு 7ம் இடத்து செவ்வாய் காரணமாக மனைவியுடன் பிரச்சினை ஏற்படலாம். அலைச்சல் கூடும். எதிரிகளின் தலையிடி இருக்கும். உடல் நலம் பாதிப்படையலாம். 8ம் இடத்து சுக்கிரன் காரணமாக ஆடம்பரத்தில் நாட்டம் கூடும். பெண் நண்பர்கள் உதவி செய்வார்கள். வெளியூர் பிரயாணம் கைகூடிவரும். குழந்தைப் பாக்கியம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டத்துக்கு இடம் உண்டு.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகர ராசிக் காரருக்கு 6ம் இடத்து செவ்வாய் காரணமாக தங்க வியாபாரிகளுக்கு பெருமளவு லாபம். எதிரிகள் அடிபணிவர். மனப்பயம் நீங்கும். 7ம் இடத்து சுக்கிரன் காரணமாக பெண் மூலம் பலவித உபத்திரவங்கள் ஏற்படும். இனசன உறவு பாதிப்படையலாம். பிள்ளைகளால் மனதில் பயம் ஏற்படும். உடல் நலம் பாதிப்படையலாம். மனைவியுடன் சச்சரவு ஏற்படலாம். சஞ்சலத்துடன் கூடிய சமாளிக்க கூடிய வாரமாகும்.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக் காரருக்கு 5ம் இடத்து செவ்வாய் காரணமாக எதிரிகளின் தொந்தரவு கூடும். பிள்ளைகளின் கவலைகள் மனதில் ஏற்படும். உடல் நலம் பாதிப்படையும். 6ம் இடத்து சுக்கிரன் காரணமாக காரியங்களுக்கு வில்லங்கங்கள் ஏற்படும். பதவி மாற்றம் ஏற்படலாம். வீண் பெயர் கேட்க நேரிடும். திடீர் யோகத்துக்கு இடம் உண்டு. கஷ்டங்கள், சஞ்சலங்கள் கூடிய ஓரளவு சுமாரான வாரம்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக் காரருக்கு 4ம் இடத்து செவ்வாய் காரணமாக தேவையில்லாத அறிமுகங்கள் ஏற்படும். வயிற்றில் உபாதை ஏற்படலாம். போக்குவரத்தில் மிகவும் எச்சரிக்கை தேவை. 5ம் இடத்து சுக்கிரன் காரணமாக பிரிந்த நண்பர்கள் ஒன்று சேரலாம். மகான்களின் தரிசனம் கிடைக்கலாம். தேவைக்கு பணம் வந்து சேரும். சகோதரர்களால் தலையிடி ஏற்படலாம். எதிரிகளின் கரைச்சல்களும் இருந்து கொண்டி ருக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.