ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

இந்திய - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கையேடு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு

இந்திய - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கையேடு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு

* இருதரப்பு – வர்த்தகம் 508 சதவீத உச்சத்தில்

* 2013 ஆம் ஆண்டு வர்த்தகம் அமெரிக்க டொலர்– 723 மில்லியன்

* குறிப்பிட்ட ஒருசில வர்த்தகத்தில் சமச்சீரின்மை காணப்படுகின்றது

உண்மையில் இலங்கையானது சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்த தென் ஆசியாவிலுள்ள முதலாவது நாடாகும். எமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் 1998 ஆம் ஆண்டில் இந்திய- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுலுக்கு வந்து வரலாற்று ரீதியான மைல்கல்லாக பதிவு செய்தது. இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளுக்காகவும் முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக எமக்கு உறுதியான ஆர்வமுள்ள மதிப்பைக் கொண்டு வருகின்றது.

எனினும் 2000 ஆம் ஆண்டில் இந்திய- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொழிற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து எமது நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் முன்னொரு போதும் இல்லாத விதமாக அதிகரித்துள்ளது. இரு தரப்பு வர்த்தகத்தின் அளவு 2000ம் ஆண்டில் சுமார் 4.08 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2012ம் ஆண்டளவில் 672 மில்லியன் டொலர்களுக்கும் மேலாக வளர்ச்சியடைந்துள்ளது.

கொழும்பில் மே 15 திகதி தாஜ் சமுத்திராவில் இடம்பெற்ற இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தம் பற்றிய கையேடு வெளியீட்டின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பல நூற்றாண்டுகளைத் தாண்டிச் செல்லும் இலங்கை - இந்திய உறவுகள், மதம், கலை, கலாசாரம், கல்வி, வர்த்தகம், அரசியல் மற்றும் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் பரந்து செல்கிறது. வேறு விதமாகக் கூறுவதானால், எமது காலங்கடந்த உறவுகள் பன்முகத் தன்மை கொண்டதாகத் தொடர்கிறது.

எப்போதும் அதிகரித்து வரும் வியாபாரத்திற்கு வியாபாரம் மக்களுக்கு மக்கள் தொடர்புகள் எமது நாடுகளுக்கிடையே நிலவி வரும் பலமான உறவுகளுக்கு மேலும் தூண்டுகையாகவும் உந்து சக்தியாகவும் உட் செல்வதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இப்பொழுது பொருளாதார மற்றும் சமூக ரீதியில் உயர்ந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. 2011ம் ஆண்டில் இலங்கையில் பொருளாதாரம் 8.4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ள அதேவேளையில் இது உலகில் நான்காவது சிறந்த வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது.

இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளுடன், இரு தரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின், தென் ஆசிய சுதந்திர வர்த்தகம் மற்றும் ஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தம் போன்ற பிராந்திய உடன்படிக்கைகள், இலங்கையில் பெருந்தொகையான உற்பத்தி ஆக்கப் பொருளாளர்களுக்கு பல அனுகூல சந்தர்ப்பங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

இவ் உடன்படிக்கை மூலம் இவ்விரு நாடுகளின் வியாபார செயற்பாடுகளுக்கும் பெரும் உந்து சக்தியாக மாறியுள்ளது.

தற்போதுள்ள மட்டத்திலிருந்து மேலும் மிகவும் உயர்ந்த மட்டத்திலிருந்து இந்தியாவும், இலங்கையும், பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் நாம் ஒன்றிணைந்து பாரிய பங்களிப்பை ஆற்ற முடியும் என தான் உறுதியாக நம்புவதாகவும், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மாநாட்டில் உரையாற்றுகையில் மேலும் கூறினார்.

கடந்த பத்தாண்டு காலமாக அமுலில் இருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்த காலத்துக்கு முன்பே கூட இந்தியாவின், இலங்கைக்கான ஏற்றுமதி அதிகமாகவே இருந்து வந்துள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களும் நல்லிணக்க செயற்பாடுகளும் இரு சாராருக்கும் பெருமளவு நன்மையை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 9 சத வீத அதிகரிப்பை காட்டியதுடன் 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 160 மில்லியன் அதிகரிப்பாகும். அத்துடன் இலங்கைக்கான முதலீடுகள் 81 ஆகும். இரு தரப்பினருக்கும் இடையில் காணப்படுகின்ற குறிப்பிட்ட ஒருசில வர்த்தகத்தில் சமச்சீரின்மை காணப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தூரநோக்குச் செயல்திறனும் மிக்க அரசியல் தலைமைத்துவம், காரணமாக இலங்கை இன்று நிலையானதும் சமாதானமான நாடாக இருக்கின்றது.

சமாதானத்தில் சாதகமானது இலங்கையிலுள்ள சகல சமூகத்தினருக்கும் புதியதொரு வாழ்க்கையையும், நம்பிக்கையினையும் அதிகரித்துள்ளது.

இந்திய தூதுவர் அசோக் கே காந்தா இந்த வைபவத்தில் உரையாற்றுகையின்போது தெரிவித்ததாவது, இந்திய- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இந்தியாவிற்கு 70% சதவீதமான பொருட்கள் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற அதேவேளை 30% சதவீதமானவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆகவே இரு நாடுகளுக்குமிடையிலான இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பல அனுகூல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு நன்மை பயக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த கருத்துக்கள் அடியோடு புதைக்கப்படவேண்டும் என கூறினார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுதலுக்கிணங்க நாங்கள் ஆடைக்கான கட்டளைகளை மூன்று மில்லியனில் இருந்து எட்டு மில்லியன் அதிகரிக்க சாதகமாக பதிலை வழங்க முயல்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

ஆனால் இது இந்தியாவிற்கு ஒரு இலகுவான நடவடிக்கை அல்ல. நமது பெருந்தொகையான மக்கள் மத்தியில் ஆடைதுறை மிக முக்கியமானதொன்றாகும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களும் நல்லிணக்க செயற்பாடுகளும் இரு சாராருக்கும் பெருமளவு நன்மையை ஏற்படுத்தியுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி