அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். பரணி
நட்சத்திரகாரர்களுக்கு பணவிரயம் ஏற்படும். கவனம் தேவை. கிருத்திகை
நட்சத்திரகாரர்களுக்கு வெளியூர் பிரயாணம் வெற்றி தரும். புதிய முயற்சிகள்
கைகொடுக்கும்.
பெண்கள் - நீண்ட நாட்களாக இருந்த பிறந்த வீட்டு சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும்.
சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும், வருத்தம் வேண்டாம். குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும்.
உத்தியோகம் - அலுவலகத்தில் மனதிற்கு திருப்தியான சூழ்நிலையே இருக்கும். எந்தவிதமான
கருத்து வேறுபாடு இருக்காது. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். பதவி உயர்வு,
சம்பள உயர்வு எதிர்பார்த்தவாறு அமையும்.
வியாபாரம் - தனியார், கூட்டுத் தொழில் இரண்டுமே வெற்றியை தரும். பொருளாதாரம் சற்று
தாழ்வுடன் இருந்தாலும் கவலை எதுவும் வேண்டாம். பங்கு வர்த்தகம் சீராக அமையும்.
குழந்தைகள் - படிப்பு, விளையாட்டு நினைத்து போல் நடக்கும்.
பரிகாரம் - செவ்வாய் அன்று சிவப்பு நிற துணியில் திரியிட்டு துர்க்கைக்கு நெய் தீபம்
9 ஏற்றவும். சனிக்கிழமை அன்று 13 நபர்களுக்கு அன்னதானம் செய்யவும்..
கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு நண்பர்கள் உறவினர்களிடையே மன வேறுபாடு வரலாம். இது
தற்காலிகமாகதான். ரோகினி நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிருகiரிட நட்சத்திரகாரர்களுக்கு மனதில் புதிய தைரியமும் உற்சாகமும் பிறக்குகம்.
பெண்கள் - குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் மனதில் திருப்தி சந்தோஷம் இருக்கும்.
கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். பணவரவு திருப்தி தரும்.
உத்தியோகம் - அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். வெளியூர் பிரயாணம்
சீராக இருக்கும் சிலருக்கு இடமாற்றம் ஏமாற்றத்தை தரலாம். மனம் தளரவேண்டாம்.
வியாபாரம் - தனியார் தொழில் மற்றும் கூட்டுத் தொழில் மனதிற்கு திருப்தி தரும்.
பணவரவு சிறப்பாக அமையும் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்./
குழந்தைகள் - உடல் ஆரோக்கியம் கவனிக்கவும். வெளியூர் செல்லும் பொழுது பொருள்கள்
களவுபோகலாம். கவனம் தேவை.
மிருகiரிடம் நட்சத்திரகாரர்களுக்கு நண்பர்கள் உறவினர்களின் வருகை அதிகரிக்கும்.
புனர் பூசம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனிக்கவும். திருவாதிரை
நட்சத்திரகாரர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட நாளாக
இருந்த சுமைகள் குறையும்.
பெண்கள் - எந்த விதமான மனகுறையும் இந்தவாரம் இல்லை. பணப்பற்றாகுறை, குடும்ப ஒற்றுமை,
பிறந்த வீடு, புகுந்த வீடு இப்படி எல்லா பக்கமும் உங்களுக்கு வெற்றி உண்டு.
மனதைரியம் அதிகரிக்கும். யாதொரு செயலும் மனதிற்கு திருப்தியை தரும்.
உத்தியோகம் - அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் வாக்கு, வாதங்கள் வேண்டாம்
தவிர்க்கவும். மனதிற்கு இதமான வாரமாக அமையும்.
வியாபாரம் - புதிய தொழில், விரிவாக்கம், கூட்டுத் தொழில் இப்படி அனைத்திலுமே உங்கள்
எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்க உதவி பெறுவீர்கள். பெரிதும் எதிலும் மாற்றம் இல்லை.
குழந்தைகள் - படிப்பு, விளையாட்டு, ஆரோக்கியம், வேலை அனைத்தும் சீராக இருக்கும்
இந்த வாரம்.
பரிகாரம் - புதன்கிழமை அன்று 5 தீபம் ஏற்றி சிவனை வழிபடவும்.
கடகம் (புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்)
புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலம் தேறும் மருத்துவ செலவு குறையும். பூசம்
நட்சத்திரகாரர்களுக்கு சந்தோஷமான வாரம். ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு
உறவினர்களுடன் சற்று கருத்து வேறுபாடு உண்டு. பாதிப்பு ஏதும் இல்லை.
பெண்கள் - பிறந்த வீட்டால் பயன் உண்டு. வீடு, நிலம் வாங்குவது, விற்பது உங்களது
எண்ணம் போல் நடக்கும். தொலைதூர செய்தி மனதில் நிம்மதி தரும். சிலருக்கு தெய்வீக
பணியில் ஈடுபாடு அதிகரிக்கலாம்.
உத்தியோகம் - அரசு, தனியார் பணி திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி
கிடைக்கும். அரசாங்க உதவி எதிர்பார்த்தோருக்கு தகுந்த பலன் கிடைக்கும். குழப்பங்கள்
நீங்கி சந்தோஷம் வளரும்.
வியாபாரம் - தனியார், கூட்டுத் தொழில் இரண்டுமே திருப்தி தரும். பண புழக்கம்
அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் பெரிதாக லாபம் தரும். எதிர்பார்த்த வெளியூர்
வியாபாரம் கை கூடும்.
குழந்தைகள் - படிப்பு, வேலை, உடல் நலம் எதுவும். பாதிப்பு இல்லை.
பரிகாரம் - திங்களன்று சிவபிரானை வில்வம் கொண்டு அர்ச்சினை செய்யவும். தயிரன்னம்
தானம் செய்யவும்.
சிங்கம் (மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்)
மகம் நட்சத்திரகாரர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். பூரம் நட்சத்திரகாரர்களுக்கு
குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்திரம் நட்சத்திரகாரர்களுக்கு குடும்பத்தில்
சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். பொதுவாக இந்தவாரம் நீங்கள் சுறுசுறுப்'புடன்
செயல்படுவீர்கள். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பெண்கள் - குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு சீராக இருக்கும்
சிலருக்கு பொதுபணி அதிகம் இருக்கும். திருமணங்கள் கைகூடும் வாரம் இது. சில
பெண்களுக்கு தாயாகும் பாக்கியம் பெறுவார்கள்.
உத்தியோகம் - தனியார் அரசு வேலைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை யாருக்கும் கடன்
கொடுக்க வேண்டாம். சிலருக்கு பணியில் மாற்றம் இருந்தாலும், பாதிப்பு ஏதும் இல்லை.
நண்பர்கள் உதவுவார்கள். நாவடக்கம் தேவை.
வியாபாரம் - தனியார், கூட்டு இரண்டிலுமே சற்று எச்சரிக்கை தேவை. புதுதொழில்,
விரிவாக்கம் இப்போது வேண்டாம். பணபுழக்கம் திருப்தி தரும்.
குழந்தைகள் - படிப்பு, வேலை ஆரோக்கியம் கவனம் தேவை. சிலருக்கு கண், வயிறு
சம்மந்தப்பட்ட நோய் வரலாம்.
பரிகாரம் - ஞாயிற்றுக்கிழமை ராகு நேரத்தில் (மாலை 4.30 முதல் 6 மணிக்குள்) காளி
தெய்வத்திற்கு 9 நெய் விளக்கேற்றவும்.
உத்தரம் நட்சத்திரகாரர்களுக்கு இந்த வாரம் மிகவும் குழப்பமான காலம். எந்த ஒரு
முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அஸ்தம் நட்சத்திரகாரர்களுக்கு வாரம்
முழுவதுமே வேலை பளு அதிகமாக இருக்கும். சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு உறவினர்,
நண்பர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
பெண்கள் - சிலருக்கு புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பிறந்த வீட்டால் பலன்
உண்டு. சகோதர, சகோதரி உறவு மேம்படும். குடும்பத்தில் அமைதி உண்டு.
உத்தியோகம் - வேலை இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு பெறுவீர்கள். எந்த ஒரு புதிய
முயற்சியிலும் இப்போது இறங்க வேண்டாம்.
வியாபாரம் - புதிய கடன் தவிர்க்கவும். கூட்டுத் தொழிலில் சிறிது மனவேற்றுமை வரும்.
அதிகமாக காலையிட வேண்டாம். பணபுழக்கம் சுமாராக இருக்கும்.
குழந்தைகள் - உடல் நலம் கவனிக்கவும். புதிய முயற்சிகள் வேண்டாம். படிப்பு
திருப்தியாக இருக்கும்.
சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு வாரம் முழுவதும் குதுகலம் தான். விசாகம்
நட்சத்திரகாரர்களுக்கு உறவினர் நண்பர்கள் வருகை அதிகரிக்கும். சுவாதி
நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை வாரம் முழுவதுமே சுறுசுறுப்புடன்
இருப்பீர்கள். புது நட்பு, உறவு ஆகியவை மனதிற்கு இதம் தரும்.
பெண்கள் - பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஆதரவு தரும். மனதில் குழப்பங்கள்
தீரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். தொலைதூர செய்தி சந்தோஷம் தரும்.
வியாபாரம் - தனியார், கூட்டுத் தொழிலில் எந்த மாறுதலும் இல்லை. அரசாங்க உதவி
எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் விரிவாக்கம் இப்போது வேண்டாம்.
புது தொழில் முயற்சி சற்று தள்ளி போடவும்.
உத்தியோகம் - அலுவலகத்தில் எதுவும் மாறுதல் இல்லை. மேல் அதிகாரிகள் சுக ஊழியர்களின்
ஆதரவு பெறுவீர்கள். வேலை மாற்றம் முயற்சி இப்போது வேண்டாம். பணியில் மாற்றம் ஏதும்
இல்லை.
குழந்தைகள் - உடல் ஆரோக்கியம் கவனம் தேவை. படிப்பு, உயர்கல்வி முயற்சி வெற்றி
அடையும். விளையாட்டு உங்கள் திறமை பாராட்டப்படும்.
விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு சற்று மன உளைச்சல் இருக்கலாம். அனுஷம்
நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு
வேலை பளு அதிகரிக்கும். பொதுவாக இந்த வாரம் பணவிரயம் இருக்கலாம். கடன் கொடுக்கவோ,
வாங்கவோ வேண்டாம்.
பெண்கள் - உறவினர்கள், நண்பர்களின் வருகை இருக்கும். செலவுகள் கூடலாம்.
சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்பாடு ஆகும். சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம்
பெறுவார்கள். சிலருக்கு காதல் கைகூடிய திருமணம் நிச்சயமாகும். மனதில் புதிய
தைரியமும், உற்சாகமும் ஏற்படும்.
உத்தியோகம் - அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். வெளியூர் பிரயாணங்கள் இருக்கும்.
எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். செலவுகள் கூடும். வியாபாரம். எந்த புது
முயற்சியும் இப்போது வேண்டாம். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. பங்கு வர்த்தகம்
கைகொடுக்கும்.
குழந்தைகள் - வெளிநாடு மேல்படிப்பு லாபம் தரும். உடல் ஆரோக்கியம் கவனம் தேவை.
விளையாட்டு துறை திருப்தியாக இருக்கும்.
பரிகாரம் - சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடவும். வஸ்தர தானம் செய்யவும்.
தனுசு (மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்)
மூலம் நட்சத்திரகாரர்களுக்கு மனதில் புதிய தைரியம் உற்சாகம் பிறக்கும். பூராடம்
நட்சத்திரகாரர்களுக்கு புதிய நட்பு, உறவு ஏற்படும். உத்தராடம் நட்சத்திரகாரர்களுக்கு
சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். இதுவரை குரு பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
பெண்கள் - இந்த ராசி பெண்களுக்கு புது தைரியம், உற்சாகம் பிறக்கும். புகுந்த வீடு,
பிறந்த வீடு இரண்டுமே சாதகமாக இருக்கும். ஆன்மிக பணியில் சிலர் ஈடுபடுவர். திருமணம்,
குழந்தை பாக்கியம் சிலருக்கு சந்தோஷத்தை தரும்.
வியாபாரம் - கூட்டுத் தொழில் தனியார் தொழில் இரண்டுமே மனதிற்கு திருப்தி தரும்.
பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் சற்று ஏமாற்றத்தை தரலாம்.
எச்சரிக்கை தேவை.
உத்தியோகம் - வேலை மாற்றம் இருக்கலாம். எதிர் பார்ப்புக்கு மாறாக இருந்த போதிலும்
பாதிப்பு இருக்காது. மேல் அதிகாரிகள் சற்று கோபமாக இருக்கலாம். வாக்கு வாதங்களை
தவிர்க்கவும்.
குழந்தைகள் - படிப்பு, வேலை, விளையாட்டு, ஆரோக்கியம் அனைத்துமே எண்ணம் போல்
நிறைவேறும்.
உத்தராடம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் கவனம் தேவை. சிலருக்கு அறுவை
சிகிச்சை வரவாய்ப்புண்டு. திருவோண நட்சத்திரகாரர்களுக்கு வேலை பளு அதிகமாகும்.
நண்பர்களுடன் கேளிக்கை உண்டு. அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு பண புழக்கம்
அதிகரிக்கும்.
பெண்கள் - கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
சிலருக்கு வீண் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வயிறு சம்மந்தப்பட்ட கோளாறு வரலாம்.
வேலைக்கு செல்பவருக்கு பணிமாற்றம் உண்டு.
உத்தியோகம் - அரசு வேலையில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளால் தொல்லை உண்டு. தனியார்
பணியில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் உதவி உண்டு. சிலருக்கு ஊதிய உயர்வு உண்டு.
வியாபாரம் - பண புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். புதிய
தொழில் தொடங்கும் முயற்சிகைகூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்
தொழில் தொல்லை இல்லை.
குழந்தைகள் - படிப்பு, வேலை அயல்நாடுமுயற்சி கைகொடுக்கும்.
பரிகாரம் - ராகு - கேதுவிற்கு முறையே வியாழன் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 4/7 தீபம்
ஏற்றவும். 11 நபருக்கு வியாழனன்று அன்னதானம் செய்யவும்.
அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். சதயம்
நட்சத்திரகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் தேறும். மருத்துவ செலவு குறையும். பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு குடும்ப ஒற்றுமை ஓங்கும். இந்த வாரம் கடன் பிரச்சினை குறையும்
குடும்பத்தில் அமைதி நிலவும்.
பெண்கள் - கணவன், மனைவி உறவு மேம்படும். பிறந்த வீட்டால் பலன் உண்டு. சகோதர, சகோதரி
உறவு நன்றாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். குடும்பத்தில் உங்களுடைய
மதிப்பு கூடும். சிலர், பொது பணியில் ஈடுபடுவர்.
வியாபாரம் - கூட்டுத் தொழில் சீராக அமையும். எதுவும் ஏற்ற இறக்கம் இல்லை. கடன்
தொல்லை தீரும். வியாபாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகம் கைகொடுக்கும் தனியார்
தொழிலில் திருப்தி இருக்கும்.
உத்தியோகம் - சீராக இருக்கும். பணியில் எதுவும் மாற்றம் இல்லை. தனியார், அரசு
இரண்டுமே திருப்தி தரும். புது பணி மாற்றம் இப்போது வேண்டாம். நண்பர்கள் உங்களுக்கு
தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.
குழந்தைகள் - படிப்பு, வேலை, விளையாட்டு எதுவும் மாற்றம் இல்லை.
பரிகாரம் - வியாழன்று குருபகவானுக்கோ அல்லது சிவபிரானுக்கோ 3 நெய்விளக்கேற்றி
அர்ச்சினை செய்யவும்.
மீனம் (பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)
உத்தரட்டாதி நட்சத்திரகாரர்களுக்கு சந்தோஷமான வாரம். பூரட்டாதி
நட்சத்திரகாரர்களுக்கு மருத்துவ செலவு உண்டு. ரேவதி நட்சத்திரகாரர்களுக்கு மனதில்
அமைதி உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தரும்.
பெண்கள் - கணவன், மனைவி அன்பு நீடிக்கும். உறவினர் நண்பர்கள் சகோதர, சகோதரி ஆகியோர்
ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ
செலவு குறையும்.
வியாபாரம் - தொழிலில் லாபம் உண்டு. தொழில் நன்றாக இருக்கும். பண பற்றாக்குறை இல்லை.
கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எண்ணங்கள் நிறைவேறும்.
உத்தியோகம் - அரசு, தனியார் பணியில் மாற்றம் உண்டு. விரும்பிய இடம் கிடைக்கும்.
ஊதிய உயர்வும் உண்டு. எந்த ஒரு புதிய முயற்சியும் இப்போது வேண்டாம். வெளிநாடு வேலை
வாய்ப்பு சிலருக்கு நன்மை தரும்.
குழந்தைகள் - உடல் ஆரோக்கியம் மேம்படும். படிப்பு உயர் கல்வி, விளையாட்டு ஆகியவை
திருப்திதரும்.