புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
ஜெயலலிதாவின் கைது உணர்த்தும் படிப்பினை

'அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்'

ஜெயலலிதாவின் கைது உணர்த்தும் படிப்பினை

காஞ்சி பீடாதிபதிகளை நினைவு கூரும் பாபு சர்மா

செய்யாத ஒரு குற்றத்திற்காக உலக இந்துக்களின் அதிஉயர்பீட குருவாகப் போற்றப்படும் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளை மார்கழி மாத திருவெம்பாவை பூஜைகளைக்கூட நடத்தவிடாது வெறும் சந்தேகத்தின் பேரில் மட்டுமே பொலிஸார் சிறையில் அடைத்த போது அதனை அன்று முதலமைச்சராக இருந்து வேடிக்கை பார்த்த செல்வி ஜெயலலிதா இன்று தான் உண்மையாகவே செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுச் சிறைவாசம் சென்றிருக்கிறார்.

அன்று முதலமைச்சராக இருந்த அவர் நினைத்திருந்தால் காஞ்சி காமகோடி பெரியவர்களை பண்பாக நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் தெய்வத்தின் துணையால் அவர்கள் எவ்விதமான குற்றச்சாட்டுமே இல்லாது விடுவிக்கப்பட்டார்கள். அதனால் உண்மையிலேயே குற்றமிழைத்து அது நிரூபிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிறை செல்வதற்காக தீக்குளிப்பதும், பஸ்களை எரிப்பதும் முட்டாள் தனமான செயலாகும். அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பதற்கு ஜெயலலிதாவின் தண்டனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளரும், ஜனாதி பதியின் இந்து மத விவகா ரங்களுக்கான இணைப் பாளருமான பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

அன்று காஞ்சி காம கோடி பீடத்தின் பெரியவர்களான ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளை யும், இளைய பீடாதிபதி விஜயேந்திரர் சுவாமிகளையும் பொலிஸார் கைதுசெய்த போது உலகமே இருண்டது போல இருந்தது. அச்சமயம் ஜெயலலிதா ஒரு சொல் கூறியிருந் தால் அவர்கள் பண்பாக நடத்தப்பட்டிருப்பர். அன்றைய காட்சிகளைக் கண்ட ஒவ்வொரு இந்துக்களின் கண்களிலும் இரத்தக் கண்ணீர் வடிந்தது. ஆனால் ஜெயலலிதாவின் கண்களில் மட்டும் ஆனந்தக் கண்ணீர் வடிந்திருக்கும். அதனை இன்று சிறையிலிருக்கும் ஜெயலலிதா உணர்ந்திருப்பார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.