புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
வாசு, அலவி, முஸம்மில், டைட்டஸ் பங்கேற்ப

வாசு, அலவி, முஸம்மில், டைட்டஸ் பங்கேற்ப

கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள 57 ஆவது ஒழுங்கை சங்கம் வீதி எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், கண்ணதாசன் மன்றத்தின் தலைவருமான கங்கை வேணியனின் தனிப்பட்ட நீண்ட கால அயரா முயற்சியின் பலனாக இவ்வீதியின் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற பெயர் மாற்று விழாவில் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில், பிரதி மேயர் டைட்டஸ் பெரேரா மற்றும் மாநகர ஆணையாளர் உட்படப் பல அதிகாரிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கங்கை வேணியனின் கட்சியின் தலைவராக இருக்கும் மனோ கணேசனோ அல்லது அவரது கட்சியைச் சேர்ந்த எவருமோ கலந்து கொள்ளவில்லை. அத்துடன் கொழும்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அழைப்பு விடுக்கப்படவில்லையா என கங்கை வேணியனிடம் கேட்டபோது சகலருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இவ்விரு தரப்பினரும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக் கப்படுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.