புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
nஜயலலிதாவின் அரசியல் ஆயுதம்

இலங்கை தமிழர் பிரச்சினையே

ஜயலலிதாவின் அரசியல் ஆயுதம்

மோடியுடனான அவரது கருத்திற்கு கண்டனம்

தமது அரசியல் வெற்றிக்காக ஜெயலலிதா நீண்ட காலமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததாகவும் தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா பிரேரணை முன்வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் துள்ளார். இது இலங்கையின் இறைமையை மீறும் செயலாகும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மாநில அரசுகளின் ஆதரவு தேவைப்படாத தனிப்பலம் கொண்ட அரசாங்கம் ஒன்றை நரேந்திர மோடி அமைத்துள்ளார். இதனால் இலங்கை அரசியல் நிலையும் ஸ்திரம் அடைந்துள்ளது. ஜெயலலிதா ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் மத்திய அரசை அது எவ்விதத்திலும் பாதிக்காது. இது இலங்கைக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.