புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
மலரும் புத்தாண்டில் இலங்கையர் வாழ்வு புதுப் பொலிவு பெறும்

மலரும் புத்தாண்டில் இலங்கையர் வாழ்வு புதுப் பொலிவு பெறும்

இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும். பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியம் உதயமாகட்டும் என பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியி லேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டுச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியத்தினை நாட்டில் ஏற்படுத்தும் வகையில் உதயமாகியுள்ள இலங்கையின் மாபெரும் கலாசாரப் பண்டிகை யான சிங்கள, தமிழ் புத்தாண் டினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

சூரிய பகவான் மீன ராசியிலி ருந்து மேஷ ராசியினை வந்தடை வதுடன் உதயமாகும் புத்தாண் டினை இலங்கையர்களின் வாழ்வில் புதியதொரு பக்கத்தினை ஆரம்பித்து வைக்கும் ஒரு விசேட சந்தர்ப்பமாகக் குறிப்பிடலாம். புதிய அறுவடையின் பின்னர், இந்நாட்டு மக்கள் சுபவேளையில் கலாசார ரீதியான பாரம்பரிய பழக்க, வழக்கங்களின் அடிப்படையில் தமது அன்றாட கருமங்களை ஆரம்பித்து வைப்பதானது எமது ஒற்றுமையினை எடுத்துக் காட்டுகின்றன.

பாக்கியமிக்க இனங்கள் என்ற வகையில் சிங்கள தமிழ் இனத்தவர்கள் உதயமாகும் புதுவருடத்தினை ஒரு களியாட்டமாகக் கருதாது அர்த்தமிக்க ஒரு கலாசாரப் பண்டிகையாக அமைத்துக் கொள்வதற்கு உறுதி பூணுதல் வேண்டும்.

உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் எமக்கேயுரிய சம்பிரதாயங்களின் ஊடாக ஒற்றுமையுடன் இந்தத் தேசத்தினைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டியதுடன், அதற்கான இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து சகல இனத்தவர்களும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும்.

30 வருட காலமாக இந்த நாட்டை ஆட்கொண்டிருந்த, கொடிய பயங்கர வாதமானது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தைரியமிக்க தலைமைத்துவத்தின் கீழ் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. யுத்தம் முடிவுக்குக் கொண்டவரப்பட்டதுடன் இந்நாட்டினை அபிவிருத்தி செய்யும் பாரிய நடவடிக்கையில் இப்போது நாம் காலடிவைத்துள்ளோம்.

பூகோள ரீதியான பொருளாதார அபிவிருத்தியினை நோக்காகக் கொண்ட பல்வேறு வேலைத்திட்டங்களுடன் சமூக, கலாசார ரீதியான அபிவிருத்தியினையும் நோக்காகக் கொண்டு பல்வேறு செயற் றிட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன்மூலம் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி ஆன்மீக ரீதியாகவும் முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினை இந்நாட்டில் உருவாக்குவதே இவ்வர சாங்கத்தின் நோக்கமாகும். எமது பண்டைய அரசர்கள் மேற்கொண்ட பாரிய கருத்திட்டங்களுக்குச் சமனான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கடந்த சில வருடங்களுக்குள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலை மையிலான அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

பழக்கவழக்கம், பண்பாடுகள் மற்றும் கலாசாரத்தினைப் பாதுகாத்துக்கொண்டு உதயமாகியுள்ள புதுவருடத்தில் இனிய எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்ளும் சந்தர்ப்பம் தற்போது இலங்கையர்களாகிய உங்களுக்குக் கிடைத்துள்ளது.

அந்தப் பாக்கியம் பொருந்திய எதிர்காலத்திற்கான ஆரம்ப தினம் இன்றாகும். உதயமாகிய சிங்கள, தமிழ் புத்தாண்டு சமாதானம், செளபாக்கியம், மகிழ்ச்சி மிக்க புத்தாண்டாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்! எதிர்காலம் அனைவருக்கும் நலமாக அமையட்டும்! என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப் பிட்டுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.