புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 

காஜலில் காயும் இலியானா!

காஜலில் காயும் இலியானா!

காஜல் அகர்வால்-இலியானா என்ற இரு அழகுப் புயல்களும், பொலிவுட்டை மையம் கொண்டிருப்பதால், அங்கு கடும் சு+றாவளிக் காற்று, சுற்றிச் சுழன்று அடிக்கிறது. இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில், காஜல் அகர்வால் அளித்த ஒரு பேட்டியில்,

ஒரு படம் வெளியானதும், அதில் நடித்த நடிகைகளின் பணி முடிந்து விடுவது இல்லை. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் சில நடிகைகள் இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றாராம்.

இவர், இலியானாவை மனதில் வைத்துத்தான் இப்படிப் பேசியுள்ளார் என சில குசும்பர்கள் கொளுத்திப்போட, காஜல் மீது இலியானா கடும் கோபத்தில் இருக்கிறாராம். இரண்டு பேருமே, பொலிவுட்டில் ஒரு சில படங்களில்தான் நடித்துள்ளனர். அதற்குள், இருவருக்கும் இடையே, முட்டல், மோதல் தொடங்கியுள்ளமை பொலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.