புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

திரை விமர்சனம்

திரை விமர்சனம்

கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் திரைப்படத்தில் சு+ர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஒரே ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். சு+ர்யா, காஜல் அகர்வால் என சிலர் மட்டும்தான் நமக்கு நன்கு பரிட்சயமான நடிகர்கள்.

இப்படத்தில் நடித்திருக்கும் மற்றவர்கள் வெளிநாட்டு நடிகர்கள். ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்து, அதில் முடிந்த அளவிற்கு மசாலாவை சேர்த்து பெரிய கமர்ஸியல் படமாக எடுப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

ஒட்டிப்பிறந்த இருவர் என்பதுதான் மாற்றான் படத்தின் கதைக்களம் என்ற எண்ணத்தில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அதையும் தாண்டி சு+ர்யாவின் கடும் உழைப்பிற்கு விடப்பட்ட சவால் என்பது குறிப்பிடத்தக்கது.

nஜனிடிக் ஆராய்ச்சி போன்று இதுவரை நாம் பார்க்காத ஒன்றை இத்திரைப்படத்தின் முதல் பாதியிலேயே மிக அழகாக உணர்த்தியிருக்கின்றார் இயக்குநர். ஒட்டி பிறந்ததோடு மட்டுமில்லாமல் இருவருக்கும் ஒரே இதயம் இருப்பதால் பச்சிளம் குழந்தைகளில் ஒன்றைக் கொன்றுவிடலாம் என்று கூறும் சு+ர்யாவின் அப்பாவின் வார்த்தையை மீறி இருவரையும் வளர்க்கிறார் சு+ர்யாவின் அம்மா. இதயம் இருக்கும் சு+ர்யா நல்ல பண்புகளுடனும், மற்றொரு சு+ர்யா பிளேபோயாகவும் முதல் பாதிப் படம் ஜhலியாக நகர்கின்றது.

இரண்டு சு+ர்யாவும் காஜல் அகர்வாலிடம் அவரவர் பாணியில் வழிகின்றனர். இறுதியில் நல்ல சு+ர்யாவை காதலிக்கத் தொடங்குகிறார் காஜல் அகர்வால். பிளேபோய் சு+ர்யா, நல்ல சு+ர்யாவிற்கு காதலிக்க, முத்தம் கொடுக்க சொல்லித் தரும் காட்சிகள் கைதட்டல்.

இந்த மாதிரியான கொமெர்ஸியல் காட்சிகளுக்கிடயே சீரியஸான கதைக்கருவுக்கான காட்சிகளையும் ஆங்காங்கே நுழைத்திருக்கிறார் இயக்குநர். விளையாட்டு வீரர்கள் அருந்தும் எனர்ஜpயான் என்ற ஹெல்த் ட்ரிங்க் நிறுவன முதலாளிதான் சு+ர்யாக்களின் தந்தை. எனர்ஜpயான் ஹெல்த் டிரிங்கின் பார்முலாவைக் கண்டுபிடிக்க உக்ரைன் நாட்டிலிருந்து ஜர்னலிஸ்டாக வருகிறார் வோல்கா.

எனர்ஜpயான் நிறுவனத்திற்குள் புகுந்து ஒரு வழியாக பார்முலாவை திருடி அதை நல்ல சு+ர்யாவிடம் கொடுத்து உன் தந்தை கெட்டவர், அவரால் இந்த நாட்டிற்கே ஆபத்து ஏற்படவிருக்கிறது என்று கூறுகிறார். இதை பிளேபோய் சு+ர்யா என் அப்பா கெட்டதே பண்ணாலும் நல்லதுக்காகத் தான் பண்ணுவாரு என இதை உதறித்தள்ளிவிடுகிறார்.

ஆனால் நல்ல சு+ர்யா இதைக் கண்டுபிடிக்க தீவிர மாக வேலை செய்கிறார். உக்ரைன் நாட்டு ஜர்னலிஸ்ட் உளவாளி என்பது தெரிந்ததும் அவர் கொல்லப்படுகிறார். ஆனால் அவர் திருடிய பார்முலா சு+ர்யாவின் கைக்கு கிடைத்துவிடுகிறது.

சு+ர்யாக்களிடமிருந்து அந்த பார்முலாவைக் கைப்பற்றி கொண்டுவரச்சொல்லி தந்தையே ஆள் அனுப்புகிறார். அடியாட்களுடன் நடக்கும் சண்டையில் இதயம் இருக்கும் சு+ர்யா தாக்கப்பட்டு கோமாவுக்குச் செல்கிறார். கோமா நிலையிலிருந்து மீளமாட்டார் எனத் தெரிந்ததும் மற்றொரு சு+ர்யாவிற்கு இதயம் மாற்றி வைக்கப்பட்டு மற்றொருவர் கொல்லப்படுகிறார்.

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் பெரும்பாலான போட்டிகளில் வெற்றியடையும் அமெரிக்காவை வீழ்த்தவும், ஐரோப்பிய நாடுகளை வெற்றியடைய செய்யவும் கண்டுபிடிக்கப்பட்டதுதான் அந்த ஹெல்த் ட்ரிங்.

இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும், மற்ற சு+ர்யாவைக் கொன்றதற்கும் தந்தைதான் காரணம் என்பதையும் பிளேபோய் சு+ர்யா கண்டுபிடிக்கிறார். இறந்த சு+ர்யா உண்மையை வெளிக்கொணர மேற்கொண்ட முயற்சிகளை பிளேபோய் சு+ர்யா தொடங்குகிறார்.

பல வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களாலேயே கண்டுபிடிக்க முடியாத எனர்ஜpயான் ஹெல்த் ட்ரிங்கின் பாதிப்பை சு+ர்யா எப்படிக் கண்டுபிடித்தார்? தன்னுடன் ஒட்டிப்பிறந்த சகோதரனைக் கொன்ற தந்தையை பொலிஸ{க்கு காட்டிக்கொடுத்தாரா? என்பது தான் மீதிக் கதை.

கொமர்ஸியல் படமாக வந்திருக்கிறது மாற்றான். காதில் பு+ சுற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு பு+க்கடையையே காதில் எடுத்து வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். சு+ர்யா கன்ஜhயிண்ட் டுவின்ஸாக நன்றாக நடித்திருந்திருக்கிறார்.

காஜல் அகர்வால் பார்ப்பதற்கும் அழகு நடிப்பிலும் அழகு. ஹீரோயிஸம் செய்யும் ஹீரோவுடன் நடனமாடவும், காதலுக்காகவும் மட்டும் வந்து செல்லாமல் அழுத்தமான கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார் காஜல்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.