ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

ஆ'ஸ் 2-வது டெஸ்ட் வெற்றியை பெண் தோழிகளுடன் கொண்டாடிய ஆஸி. வீரர்கள்

ஆ'ஸ் 2-வது டெஸ்ட் வெற்றியை பெண் தோழிகளுடன் கொண்டாடிய ஆஸி. வீரர்கள்

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆ'ஸ் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லோர்ட்ஸில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா 405 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட்டில் தோற்றிருந்த போதிலும் லோட்ஸ் நடந்த 2-வது டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்த மாபெரும் வெற்றியை அவுஸ் திரேலிய வீரர்கள் தங்கள் தோழிகளுடன் இலண்டனில் உள்ள இரவு விடுதிக ளில் கொண்டாடினார்கள்.

இரட்டை சதம் அடித்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங் காற்றிய சுமித் தன்னுடைய தோழியான டானி வில்லிசுடனும், மிட்சல் மார்ஷ் அவரது துணையான இசாபேல் பிளாட்டுடனும் இரவு விடுதி ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் தந்துரி சிக்கன் வகைகளை ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தார். அதே போல மற்ற வீரர்களும் லண்டனில் உள்ள பிரபல இரவு விடுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இத்தொடரில் இன்னும் மூன்று ஆட்டங்கள் மீதியுள்ள நிலையில் அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி ஆ'ஸ் தொடரை வெல்லும் எனக் கூறப்படுவதால், 3-வது டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி