ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

தி.மு.கவுக்கு தகவல் சொன்னது யார்? அ.தி.மு.க., மேலிடம் விசாரணை

தி.மு.கவுக்கு தகவல் சொன்னது யார்? அ.தி.மு.க., மேலிடம் விசாரணை

தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் குறித்த அறி விப்பு வெளியாவதற்கு முன் தி.மு.க. தலைமைக்கு தெரிவது அ.தி.மு.க. தலைமைக்கு கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க தி.மு.க. விற்கு தகவல் தெரிவிப்பது யார் என ரகசிய விசார ணையை துவக்கி உள்ளது.

முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின் தமி ழக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகள் உடனுக்குடன் தி.மு.க. தலைமைக்கு தெரிகின்றன. முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றதும் சட்டசபை கூட்டத்தை கூட்ட திகதி முடிவு செய்த தகவல் அறிந்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதன்பின்னே சட்டசபை கூடும் திகதி அறிவிக்கப் பட்டது.

இதே நிலை nஜயலலிதா மீண்டும் முதல்வரான பின்னும் நீடிக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் துவக்க விழா நடைபெற உள்ள விவரம் வெளியாவதற்கு முன் தி.மு.க. தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்க வேண் டும் என ஸ்டாலின் உடனடியாக கோரிக்கை விடுத் தார். அதன்பின்னே மெட்ரோ ரயில் திட்டத்தை வீடியோ கொன்பரன்ஸ் மூலம் முதல்வர் nஜயலலிதா திறந்து வைத்தார். அதேபோல் மதுபான கடைகளின் எண்ணிக் கையை குறைப்பது குறித்து அ.தி.மு.க.வில் ஆலோ சிக்கப்பட்டது.

இந்த தகவலறிந்ததும், தி.மு.க. தலைவர் கருணா நிதி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் படுத்துவோம் என அறிவித்து விட்டார். அரசின் முடி வுகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாவதற்கு முன் தி.மு.க. தலைமைக்கு கிடைப்பது அ.தி.மு.க. வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க தி.மு.க.விற்கு தகவல் கொடுப்போர் யார் என்ற விசாரணை துவக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறிய தாவது: தற்போதைய அமைச்சர்களின் பி.ஏ.க்களில் பலர் தி.மு.க. அமைச்சர்களிடம் பி.ஏ.க்களாக இருந்த வர்கள்; அவர்களில் சிலர் இன்னமும் தி.மு.க. விசு வாசிகளாக உள்ளனர். அதேபோல் தி.மு.க. ஆட்சி யில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள், தற்போதும் முக்கிய பதவிகளில் உள்ளனர். அவர்கள் தி.மு.க. வினருக்கு தகவல்களை தெரிவிக்கின்றனர். சட்டசபை செயலகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் உடனுக்குடன் தி.மு.க.வினருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம் அங்கு நிலவும் கோஷ்டிபு+சல்.

இவர்களை பயன்படுத்தி தகவல்களை முன்னதாக அறிந்து கொள்ளும் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் அறிவிப்பு வெளியாவதற்கு முன் கோரிக்கை வைக் கின்றனர். அறிவிப்பு வெளியான பின் தங்களால் அது நடந்தது என்கின்றனர். இதை தடுக்க அரசு எடுக்கும் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். ரகசியம் எனக்கூறி அறிவிக்காமல் இருந்தால் இப் படித்தான் பிறர் பெயர் தட்டிச் செல்லும் நிலை ஏற் படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி