ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

சிறையில் லாலு பிரசாத் யாதவுடன் ஜனாதிபதி பிரணாப் மகன் சந்திப்பு

சிறையில் லாலு பிரசாத் யாதவுடன் ஜனாதிபதி பிரணாப் மகன் சந்திப்பு

ராஞ்சி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ்வை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

சிறையிலிருக்கும் அவரை ராமவிலாஸ் பஸ்வான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று முன்தினம் மாலை லாலுவை சிறையில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசினார். மரியாதை நிமித்தம் லாலுவை சந்தித்ததாக வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லாலு பிரசாத் யாதவ் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறார். அவரை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு அண்மையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தில் உடனடியாகக் கையெழுத்திட ஜனாதிபதி மறுத்துவிட்டார். ராகுல் காந்தி எதிர்ப்பை தொடர்ந்து அவசர சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அவசர சட்டம் வாபஸ் பெற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் முக்கிய காரணம் என பா.ஜ தலைவர் எல். கே. அத்வானி கருத்துத் தெரிவித்தார். இந்நிலையில் பிரணாப்பின் மகன் லாலுவை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது குறிப் பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி