ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடல் வர்த்தக மாநாட்டின்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடல் வர்த்தக மாநாட்டின்
உத்தியோகபூர்வ அனுசரணையாளராக பார்தி எயார்டெல் லங்கா இணைவு

,லங்கையில் தொலைத் தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் முன்னிலையில் திகழும் பார்தி எயார்டெல் லங்கா நிறுவனம், இலங்கையில் நவம்பர் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடல் வர்த்தக மாநாட்டுக்கு உத்தியோகபூர்வ பிரதான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடல் 2013 மாநாடு என்பது ஆசியாவை பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளின் பின்னர், ஆசிய நாடொன்று இந்த மாநாட்டை முன்னெடுப்பது இதுவே முதல் தடவையாக அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் பொதுநலவாய வர்த்தக கவுன்சில் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடி சர்வதேச விவகாரங்களான பல்தரப்பு வியாபார விவகாரங்கள், சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, சூழல் பிரச்சினைகள், பாலினப் பிரச்சினைகள், சுகாதாரம், மனித உரிமைகள் மற்றும் இதர அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றன.

பொதுநலவாய வர்த்தக மாநாடு 2013 என்பது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் ஒரு பிரதான உள்ளடக்கமாக அமைந்துள்ளது.

இந்த மாநாட்டின் நோக்கம், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நிலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் ‘செல்வத்தின் உருவாக்கம் மற்றும் சமூக அபிவிருத்தி பொதுநலவாய, இந்திய பெருங்கடல் மற்றும் சார்க்’ எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்படுகிறது.

சர்வதேச நோக்கத்துக்கு அமைவாக, பொதுநலவாய வர்த்தக மாநாட்டின் மூலம் ஒன்றிணைந்து, உலகளாவிய ரீதியில் காணப்படும் வியாபார மற்றும் முதலீட்டு பிரச்சினைகள் குறித்து ஆராய்வது, தற்போது காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிவது, குறித்த அரசாங்கத்துக்கும் வர்த்தக தலைவர்களிடையே வலையமைப்பை ஏற்படுத்தி வர்த்தக பங்காண்மைகளை சர்வதேச பங்காளர்களுடன் ஏற்படுத்துவது, இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்யும் நாட்டினுள் முதலீடுகளை கவர்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.

இலங்கையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதன் மூலம் நாட்டில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி, சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவதுடன், மேலும் பல வெளிநாட்டு முதலீடுகள் நாட்டினுள் வருவதற்கு ஏதுவான காரணியாகவும் அமைந்திருக்கும்.

இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் வர்த்தக நிகழ்வாக கருதப்படும், பொதுநலவாய வர்த்தக மாநாடு 2013, இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும். இந்த நிகழ்வில் வெவ்வேறு அரசாங்கங்களின் 12 தலைவர்கள் தமது உரையை நிகழ்த்தவுள்ளதுடன், 6 கண்டங்களைச் சேர்ந்த 60 நாடுகளின் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் 100 சர்வதேச வர்த்தக தலைவர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பங்காண்மை குறித்து பார்தி எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுரேன் குணவர்தன கருத்து தெரிவிக்கையில், ‘பொதுநலவாய வர்த்தக மாநாடு போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அனுசரணை வழங்க வாய்ப்பு கிடைத்தமையானது எமக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு மிகவும் பொருத்தமான காலப் பகுதியில் ஏற்பாடு செய்யப்படுவதாக நாம் நம்புகிறோம்.

இதன் மூலம் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த அங்கத்துவ நாடுகள் பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உடன்படிக்கைகளுக்கு வர முடியும். பாரிய பொருளாதார சூழலை உறுதிப்படுத்தும் வகையில் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த தருணமாக இது அமைந்துள்ளதாக, இலங்கையில் நீண்ட கால முதலீட்டாளர் எனும் வகையில், எயார்டெல் லங்கா நம்பிக்கை கொண்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் உறுதியான பொருளாதார சூழ்நிலை குறித்து உலகளாவிய ரீதியில் காணப்படும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு சிறந்த ஒரு களமாக இந்த மாநாடு அமைந்திருக்கும். சர்வதேச பொருளாதார மாற்றத்தில் பங்களிப்பை வழங்கும் பெரும்பாலான நாடுகள் பொதுநலவாய நாடுகளில் உள்ளடங்கியுள்ளமையை எம்மால் அவதானிக்க முடிகிறது.

இந்த மாநாட்டின் மூலம் கொள்கைகளை பகிர்ந்துகொள்ள மற்றும் செல்வ உருவாக்கம் மற்றும் சமூக அபிவிருத்தி போன்றவற்றை குறித்து 360 பாகையில் கலந்தாலோசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அதன் மூலம் உலக பொருளாதார சூழலில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கும்’ என்றார்.

பொதுநலவாய வர்த்தக மாநாடு 2013 அரசாங்கத்துக்கும் வர்த்தக தலைவர்களிடையே வலையமைப்பை ஏற்படுத்தி வர்த்தக பங்காண்மைகளை சர்வதேச பங்காளர்களுடன் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த வர்த்தக வலையமைப்பின் முலம் உலகளாவிய ரீதியில் காணப்படும் வர்த்தக தலைவர்கள், அரச தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னணி வர்த்தக பிரமுகர்கள் என அனைவரையும் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது.

விவசாயம், உற்பத்தி, சுற்றுலா, கல்வி, தகவல் தொழில்நுட்பம், டீழு, மீள்புதுப்பிக்கக்கூடிய சக்தி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள ஒரு நிறுவனம் எனும் வகையிலும், ஒன்றிணைந்த தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையிலும், உலகளாவிய ரீதியில் மூன்றாவது மிகப்பெரிய கையடக்க தொலைபேசி சேவைகளை வழங்கும் நிறுவனமாகிய பார்தி எயார்டெல், இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வகையில் தனது முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன் ஆசியா ஆபிரிக்கா உள்ளடங்கலாக 276 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி