ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

வானிலை அவதான நிலையம் உரிய நேரத்தில் தகவல் வழங்கியது

சீரற்ற காலநிலை பாதிப்பு: மக்களுக்கு அறிவூட்டிய முறை:

வானிலை அவதான நிலையம் உரிய நேரத்தில் தகவல் வழங்கியது

ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கை சமர்ப்பிப்பு

காலநிலை மாற்றம் மற்றும் அது தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டப்பட்ட முறை குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளிடம் கையளிக்கப்பட்ட தாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தினகரனுக்குத் தெரிவித்தார்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படை யில் வானிலை அவதான நிலையம் தகு ந்த நேரத்தில் உரிய முறையில் கால நிலை மாற்றம் குறித்து மீனவர்களுக்கு அறிவூட்டியுள்ளமை தொழில்நுட்ப ரீதியாக ஊர்ஜிதம் ஆகியிருப்பதாகவும் அமைச்சர் அமரவீர நேற்று கூறினார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை வீசிய கடும் சுழல் காற்றினால் சுமார் 40 இற்கும் அதிகமான மீனவர்கள் பலி யாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை களை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய விசாரணைகள் துரிதப் படுத்தப்பட்டு நேற்றைய தினமே ஜனாதிபதி அவர்களிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வானிலை அவதான நிலையம் கடந்த வெள்ளிக்கிழமை 4 மணியளவில் மீனவர்களுக்கான அறிவூட்டலை உரிய முறையில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தகவல் பரிமாற்ற நிலையத்திற்கு பெற்றுக்கொடுத்ததாக அறிக்கை வழங்கியிருந்தது.

இருப்பினும் தமக்கு உரிய நேரத்தில் எவ்வித அறிவூட்டலும் கிடைக்கவில்லையென மீனவர்கள் முறைப்பாடு செய்து வந்தனர்.

இந்நிலையில் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர, டெலிகொம் நிறுவனத்தின் உதவியை நாடியிருந்தார். இதன்படி வானிலை அவதான நிலையம் கூறுவதன் பிரகாரம் அன்றைய தினம் 4 மணியளவில் காலநிலை மாற்றம் தொடர்பிலான அறிவூட்டல் குறித்த தகவல் பரிவர்தனை நிலையத்திற்கு தொலை நகலூடாக அனுப்பி வைக்கப்பட்டமை ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

இது குறித்த முழுமையான அறிக்கை நேற்று ஜனாதிபதி அவர்களிடம் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி