ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்

138 வழித்தடத்தில் முதற்கட்ட ஆரம்பம்

தனியார் பஸ்களில் டிக் கட்களுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. கொட்டாவை - கொழும்பு, மத்தேகொட - கொழும்பு ஆகிய பஸ் மார்க்கங் களினூடாக பயணிக்கும் பஸ்களில் முதலில் இந்த சேவை ஆரம்பிக்கப் பட்டதாக தனியார் பஸ் உரிமையா ளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

விரைவில் ஏனைய பஸ் மார்க்கங்களிலும் முற்கொடுப்பனவு அட்டைகள் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறிய அவர், அடுத்து ஏனைய மாகாணங்களுக்கும் இந்த திட்டம் விஸ்தரிக்கப்படும் என்றார்.

புதிய முற்கொடுப்பனவு அட்டையை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக நேற்று 138 பஸ் மார்க்கத்தினூடாக பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்பட்டன.

200 ரூபாவை வைப்புச் செய்து முற்கொடுப்பனவு அட்டையை பெற முடியும் எனவும் அதன் பின் தேவையான தொகையை இதில் இட்டு பஸ்களில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேற்படி அட்டைகள் பஸ் தரிப்பிடங்கள், மக்கள் வங்கிக் கிளைகள் மற்றும் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை விற்கும் இடங்கள் என்பவற்றினூடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முற்கொடுப்பனவு அட்டையில் பணம் முடிந்தால் மீண்டும் பணத்தை இட்டு இதனை பயன்படுத்த முடியும் எனவும் கெமுனு விஜேரத்ன கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி