வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
நல்லாட்சியின் சார்பில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி

நல்லாட்சியின் சார்பில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி

சமாதானத்திற்கான பாதையைச் செம்மைபடுத்தும் பயணத்தில் நிதானப்போக்கு அவசியம் என்பதை உலகின் பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் உணர்த்தியிருக்கின்றன. சமாதானப் பாதையைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மும்முரமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ளப்படவேண்டிய அதேநேரம், பாதையை வகுத்துக்ெகாண்டதன் பின்னர் அதில் நிதானமாகப் பயணித்து இலக்ைக அடையவேண்டும் என்பதை வரலாற்றுப்பாடங்கள் கற்றுத்தந்திருக்கின்றன.

தென்னாபிரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த நிறவெறிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி "உண்மையைக் கண்டறிதல் மற்றும் மீளிணக்கத்தை ஏற்படுத்தல் செயற்பாடுகளும் மற்றுமோர் முப்பதாண்டு நீடித்த வட அயர்லாந்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த பெரிய வெள்ளி உடன்படிக்ைகயும் வெற்றியளித்த சமாதான முயற்சிகள் எனக்​ெகாள்ள முடியும்.

இரு நாடுகளிலுமே தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்கின்றன. நமது நாட்டில் தென்னாபிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு நிரந்தர அமைதியை நிலைநிறுத்துவதற்கு நல்லாட்சியாளர்கள் நடவடிக்ைகயில் இறங்கியிருக்கிறார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு முன்னர், தமக்கு ஓர் அடியை எடுத்து வைக்க வாய்ப்பு கிடைத்தாலே இலக்ைக நோக்கிப் பயணிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். அதற்கமைய அவர் முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்தபோது, பின்னாளில் வந்த நிறைவேற்று அதிகாரத்தினால் அவரால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாதுபோய்விட்டது. அதில் முக்கியமான ஒரு தடையாக அமைந்தது இரண்டு கட்சிகள் தொடர்ந்த நிர்வாகம் என்றால் மிகையில்லை. தற்போது இலங்கையின் வரலாற்றில் இரண்டு பெரிய கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சியை நடத்திவரும் தருணத்தில், முப்பது ஆண்டுகால இன முரண்பாட்டுக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் கண்டு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நீண்ட பயணமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மனத்துடனும் இணக்கப்பாட்டுடனும் நிரந்தர அமைதியை நோக்கிப் பயணித்து வருவதை சர்வதேசமும் வரவேற்றுப்பாராட்டியிருக்கிறது.

விசேடமாக இரு தலைவர்களும் உலக நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கின்றபோது தமது அர்ப்பணிப்பை உறுதிபடத்தெரிவித்து வருகிறார்கள். அதற்கிணங்க அவர்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உலகத் தலைவர்களும் உறுதி வழங்கியிருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வில் உரைநிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "எனது அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் இலங்கை மக்கள் அச்சம் மற்றும் பீதியில் வாழ்ந்த ஒரு பின்னணியினை நாம் அகற்றி அதற்குப் பதிலாக மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ரீதியிலான சமூக மொன்றில் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்கியுள்ளோம்.

எனது அரசாங்கத்தின் நோக்கம் உலகில் மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் நாடுகளுள் ஒன்றாக இலங்கையை மாற்றுவதாகும். அதற்காக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்வதனூடாகவும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதனூடாகவும் உலகின் பலம் பொருந்திய சிறந்த மக்களாக இலங்கை மக்களை மாற்றுவது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமும் அபிலாசையும் ஆகும்.

வறுமை, இன்று முழு உலகினையும் ஆட்டிப் படைக்கும் ஒரு சவாலாக மாறி உள்ளது. அதனால் இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டை நாம் பெயரிட்டுள்ளோம். அதற்கமைய பொருளாதார அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு நான் முன்னுரிமையளிக்கிறேன்.

முக்கியமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடனும் ஏனைய நாடுகளுடனும் நாம் நடவடிக்கை மேற்கொள்ளும் போதும் நிலையான அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து சமூகத்திற்கும் நாட்டுக்கும் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கே நாம் பாடுபடுகின்றோம். அதன் போது பிரதான தேவையான பொருளாதார வெற்றியை அடைவதற்கு நாம் எப்போதும் முன்னுரிமையளித்துள்ளோம்.சூழல் பாதுகாப்பு போன்றே ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த பாரிஸ் மாநாட்டில் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்டு பிரதானமாக எமக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களுடன் நாட்டின் பரிவர்த்தனை யுகத்தில் சகல துறைகளிலும் மாற்றங்களை நிகழ்த்துவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று உலகின் பல நாடுகளில் சர்வதேச ரீதியாக யுத்தத்தின் பல்வேறுபட்ட தன்மைகள் சில சந்தர்ப்பங்களில் மிகக் கொடூரமான நிலைமைகளை உருவாக்கியதைப் போன்றே ஒற்றுமையின்மை, வெறுப்பு மற்றும் குரோதம் என்பன நிறைந்துள்ள புரையோடிப் போன சமூகங்களை நாம் காண முடிகிறது.

அங்கு மனித சமுதாயத்திற்குத் தேவையான பண்பாடு பாரதூரமானதொரு பிரச்சினையாக மாறியுள்ளது. சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல்வேறுபட்ட மோதல்களின் போது பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் பணிக்கு சகல நாடுகளும் முன்னுரிமையளிக்கவேண்டுமென நான் நம்புகிறேன்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்றவகையில் தேரவாத பௌத்த சிந்தனையின் அடிப்படையில் இன்று உலகில் நிலவும் பலபிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்பதை நான் உணர்கிறேன்.

அதேபோன்று கிறிஸ்தவ மதம், இஸ்லாம் மதம் போன்றே இந்துமதம் உள்ளிட்ட ஏனைய மதங்களின் ஆன்மீக சிந்தனைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக அனைத்து நாடுகளினதும் ஆசீர்வாதம் அவசியமாகவுள்ள யுகமாக நான் இதைக் கருதுகிறேன். தேவையான இம் மாற்றங்களை மேற்கொள்ளும் வேளை இலங்கை போன்றே உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பாரதூரமான ஒரு பிரச்சினை பற்றி மதிப்பிற்குரிய ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கவனத்தை ஈர்ப்பதற்கு நான் விரும்புகிறேன். ஒட்டுமொத்த மனித சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அனர்த்தத்திற்கும் அவலத்திற்கும் ஆளாக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே அதுவாகும். சமூக ரீதியாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் சமுதாயம் மற்றும் அனைத்து மக்களும் பாரதூரமானதொரு அனர்த்தத்தினை எதிர்நோக்கியுள்ளதுடன் இப்போதைப்பொருள் பிரச்சினையை சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் இல்லாதொழித்தல், முறியடித்தல் மற்றும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் தற்போதுள்ளதை விடவும் முறையான மற்றும் தீர்க்கமான ஒரு வேலைத்திட்டத்தின் அவசியத்தை நாம் வலியுறுத்துகிறோம். ஜனநாயகம், சுதந்திரம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்குத் தேவையான பல்வேறு நடைமுறைகளின் சீரான பரிவர்த்தனை மூலம் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி மீண்டும் எனது நாட்டில் யுத்தம் ஒன்று உருவாவதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன என்பதை நான் மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போது சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் எனது நாட்டில் யுத்தம் ஒன்று உருவாவதைத் தடுத்தல், நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலைவகிக்கும் ஒரு நாடாக எனது நாட்டை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்.

இங்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய அரசியல் மறுசீரமைப்பினூடாக எனது நாட்டைப் போன்றே உலகின் அனைத்து நாடுகளும் தனக்கே உரித்தான தேசிய சிந்தனை மற்றும் தொலைநோக்கு என்பவற்றுடன் சமூக ஜனநாயக ரீதியிலான ஓர் அரசியல் பயணத்தை நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கு ஏற்புடைய அனுகூலமான முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட மறுசீரமைப்பிற்காக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கருத்தாடல் என்பன எமது நாட்டைக் கட்டியெழுப்பும் பணியின் போது முக்கிய காரணிகளாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

சுமார் 30 ஆண்டுகளாக யுத்தத்தை எதிர்கொண்ட நாம் எப்போதும் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி புத்திசாதுர்யமாகவும் அறிவுபூர்வமாகவும் ஆரவாரமின்றி அமைதியாகவே பயணம் செய்தோம். எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அவ்வாறு பயணித்த நான் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பினையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்."

என்று ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு உலகின் பல நாடுகளினதும் தலைவர்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

வாக்குறுதியளிப்பது கடந்த காலங்களிலும் இடம்பெற்றுத்தான் இருக்கிறது. அஃது அந்த வாக்குறுதியை அளிக்கும் தலைவர்களில்தான் நிறைவேறுவதும் நீர்த்துப்போவதும் தங்கியிருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய ஆட்சியின்போது பலரும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். ஆனால், சிறுபான்மையினரோ, தமிழ் மக்களோ நம்பிக்ைககொள்ளக்கூடிய வகையில் அவர்கள் நடந்துகொள்ளவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இல்லை. ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் நம்பிக்ைக வையுங்கள் என்று தமிழ்த் தலைவர்களே வலியுறுத்தும் அளவிற்கு நல்லாட்சியின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னேற வேண்டும். ஏனெனில், நிலையான அமைதிக்கான நீண்ட பயணத்தின் இலக்ைக அடைவதற்கு இதுவே இறுதி வாய்ப்பு. வரலாற்றில் இரண்டு கட்சிகள் இணைந்து நடத்தும் நல்லாட்சியின் சார்பில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியிருப்பதும் இதுவே முதல் சந்தர்ப்பம். ஆகவே, எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசின் மீது சர்வதேசமும் தமிழ் மக்களும் நம்பிக்ைக வைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பம்சம் எனலாம். அந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் தளிர் விட்டிருக்கும் நம்பிக்ைக விருட்சமாக வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை இரு தலைவர்களும் நிறைவேற்றுவார்களா?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.