புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

இலங்கையின் புதிய ஜனாதிபதி

இலங்கையின் புதிய ஜனாதிபதி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் கடந்த 09.01.2015 அன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1951ஆம் ஆண்டு செப்டம்பர் 03ஆம் திகதி பொலன்னறுவையில் பிறந்த இவர், அல்பர்ட் சிறிசேன மற்றும் நந்தவதி தம்பதியரின் மகனாவார்.
இவருடைய மனைவியின் பெயர் ஜயந்தி புஷ்பகுமாரி. இவருக்கு தர்ஷனி சதுரிகா, தரனி சாரிகா ஆகிய ரெண்டு பெண் பிள்ளைகளும் தரண தாரக என்ற மகனும் உள்ளனர்.

பொலன்னறுவை றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில் கற்று 1973ஆம் ஆண்டில் டிப்ளோமா பட்டம் பெற்றதோடு அரசியல் விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தினை ரஷ்யாவின் மக்சிம் கார்க்கி இலக்கிய கல்லூரியில் பெற்றார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.

எம்.ஐ.எம்.பஹாட்,
தரம் - 05கி,
ஸாஹிரா தேசிய பாடசாலை, மாத்தளை.
 

உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கி

லண்டனில் செயல்பட்டு வரும் Roal Astroonomical Society  என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கியை விண்வெளியில் அமைக்கவுள்ளது. இதற்கு ATLAS என பெயரிடப்பட்டுள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 லட்சம் மைல்களுக்கு அப்பால் விண்வெளியில் இந்த தொலைநோக்கி நிலை நிறுத்தப்படும். இந்த தொலைநோக்கியால் 30 ஒளி ஆண்டுகளுக்கும் அப்பாலுள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணை கோள்கள் ஆகியவற்றை கூட கண்காணிக்க முடியும். மேலும் வேறு கோள்களில் உயிர் வாழ்வதாக கருதப்படும் ஏலியன் என்ற வேற்றுக் கிரகவாசிகள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய முடியும்.

தற்போது விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள Hubble  தொலைநோக்கி 44 அடி நீளம் கொண்டது. ஆனால் ATLAS அதைவிட 4 மடங்கு நீளம் கொண்டதாகவும், 52 அடி சுற்றளவு கொண்ட தொலைநோக்கு கண்ணாடியை கொண்டதாகவும் அமைக்கப்பட உள்ளது.
மிகப் பிரமாண்டமான அட்லஸ் தொலைநோக்கியை ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்து செல்வது கடினம் என்பதால் அதன் உதிரிப்பாகங்களை மட்டும் நாஸாவின் ஓரியன்ட் ராக்கெட் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விண்வெளியில் வைத்து பொருத்தப்படும். இந்த தொலைநோக்கி செயல்பட தொடங்கும் பட்சத்தில் விண்வெளியில் சுற்றிவரும் 60க்கும் மேற்பட்ட புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

வரலாற்று புவியியல் காரணங்களால் புகழ்பெற்ற சில இடங்கள்

ஐரோப்பாவின் விளையாட்டிடம் - சுவிட்சர்லாந்து
ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
நல்லிரவில் சூரியன் தெரியும் நாடு - நோர்வே
மத்திய தரைக்கடலின் திறப்பு (சாவி) - ஜிப்ரல்டர்
நைலின் நன்கொடை - எகிப்து
இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம்
கண்ணீர் வாசல் - பாபெல் மண்டெப்
உலகின் கூரை (முகடு) - பமீர்மேடு
மோட்டார் வண்டியின் நகரம் - டெட்ரெயிட்
ஏரிகளின் நாடு - பின்லாந்து
சீனாவின் துயரம் - ஹோயோங்க நதி
இந்து சமூத்திரத்தின் முத்து - இலங்கை
உலக சக்கரை கிண்ணம் - கியூபா
ஆசியாவின் நோயாளி - பர்மா (மியன்மார்)
ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி

ஏ.எம்.ஸைமி ஸதா,
எம்.எச்.எம்.ஐஸ்வாடி வீதி,
வாழைச்சேனை - 04
 

எனது பாடசாலை

* எனது பாடசாலையின் பெயர் அக்குறனை ஸாஹிரா தேசிய பாடசாலை.
* எனது பாடசாலை புளுகொஹதென்ன எனும் இடத்தில் அமைந்துள்ளது.
* எனது பாடசாலையின் அதிபரின் பெயர் ஜனாப் இர்சாட்
* பாடசாலையில் பெரிய மைதானம் உண்டு
* எனது பாடசாலை மிகவும் அழகாக இருக்கும்.

எம்.எஸ்.எம்.ஹய்சம்,
தரம் - 03வி,
அக்குறணை ஸாஹிரா,
தேசிய பாடசாலை, அக்குறனை.


 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.