புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்

நுவரெலியா கல்வி வலயம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துள்ளது

உதவி கல்விப் பணிப்பாளர் எஸ். செல்வராஜா

அண்மையில் வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்வருடம் நுவரெ லியா கல்வி வலயம் எதிர்ப்பார்த்த இலக்குகளை அடைந்துள்ளதாக நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம் பக் கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திரு. செல்வராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் நுவரெலியா கல்வி வலயத்தில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பெறு பேறுகளை ஒப்பிடும்போது தமிழ் பாடசாலைகளில் 122 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்திருந்தனர். ஆனால் இவ்வருடம் அதனை விட அதிகரித்துள்ளது எனலாம். கோட்டம் 1 இல் 39 பாடசாலைகளில் 34 மாணவர்களும், கோட்டம் 2 இல் 42 பாடசாலைகளில் 72 மாணவர்களும், கோட்டம் 3 இல் 38 பாடசாலைகளில் 52 மாணவர்களும் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மேலும் ஹோல்புறூக் தமிழ் வித்தியாலயத்தில் மாண வன் ஒருவன் 185 அதிக கூடிய புள்ளிகளை பெற்று நுவரெ லியா கல்வி வலயத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். அதேபோல் இரண்டாம் இடத்தை நுவரெலியா கல்வி வலயத்தில் பெல்மோரல் பாடசாலை மாணவன் 184 புள்ளிகளை பெற்றுள்ளார். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து தோற்றிய 103 மாணவர்களில் 19 பேர் வெட்டுப்புள்ளியான 157 புள்ளிக ளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள் ளனர். அதேபோல் கொட்டகலை தமிழ் வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 133 மாணவர்களில் 26 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அந்த வகையில் மத்திய மாகாணத்தில் புலமைப்பரிசில் பெறுபேறுகள் அதி கரிப்பதற்கு நுவரெலியா கல்வி வலய மும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வாறான வெற்றிக்கு வழிசமைத்தவர் கள் நுவரெலியா கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளர் எம்.ஜி.அமரசிறி பியதாஸ, முன்னாள் நுவரெ லியா கல்வி வலய மேலதிக கல்விப் பணிப்பாளரும் தற் போதைய ஹெட்டன் வலய கல்விப் பணிப்பாளருமான ராஜசேகரம், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஏக்கநாயக்க, மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப் பாளர் சதீஸ், மத்திய மாகாண ஆரம்பக்கல்வி பணிப்பாளர் ஆனந்தசிறி, மத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பா ளர் திருமதி. அமுதவள்ளி, நுவரெலியா கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம், நுவரெலியா கல்வி வலய அபிவிருத்தி திட்ட பணிப்பாளர்கள், சேவை கால ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், கற் பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக் கின்றேன்.

மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களான வேல்ட்விசன், தலவாக்கலை என்.எஸ்.பி.வங்கி போன்றனவும் எமக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்தன. இனிவரும் காலங்க ளிலும் இவர்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பை நல்கி மாண வர்களின் பெறுபேறுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பெற்றோர் தமது பிள்ளைகள் புலமைப் பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றமைக்காக தண்டித்துள்ளதுடன் பல்வேறு வகைகளில் பிள்ளைகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்தனர்.

இதனால் பிள்ளைகள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்பட்டன. கல்வி கற்றலில் வெறுப்புத் தன்மையும் காணப்பட்டு அவர்கள் கற்றலை வெறுத்து ஒதுக்க கூடிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன.

எனவே அவ்வாறான தண்டனைகளை பிள்ளைகளுக்கு வழங்காதீர்கள். இந்நிலை மாற வேண்டும் இலங்கையில் கல்வி சுற்று நிரூபனத்தின்படி புலமைப் பரிசில் பரீட்சையில் 70இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் அனைவரையும் சித்தியடைந்தவர்களாக கருதப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அரசாங்கத்தினூடாக சான்றிதழ் களும் வழங்கப்படுகின்றன என்றார்.

மு. இராமச்சந்திரன்...-

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.