புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
அப்துல் அஸீஸ்

மனிதருள் மாணிக்கம்

அப்துல் அஸீஸ்

ஓர் அமைப்பில் கொண்டு வந்தவர்

இந்திய வம்சாவளியினர் ஓர் அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை திரு. பண்டிட் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தினார். இலங்கையில் தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க போன்ற தீவிரவாதிகளால் இந்தியர்களின் செல்வாக்கையும், நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளிலிருந்தவர்களை வெளியேற்ற வேண்டுமென்ற கோசமும் எழுப்பப்பட்டது.

அப்போதைய முன்னணி வர்த்தகர்களான திரு. லெட்சுமணன் செட்டியார், வள்ளியப்ப செட்டியார் ஆகியோர் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும் வர்த்தகர்கள். இவர்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்ற எதிர்ப்பு இயக்கம் இலங்கையில் உருவாகியது. அதனை மையமாக வைத்து நாட்டில் சிதறிக்கிடந்த இந்திய சங்கங்களையும், சேவா இயக்கங்களையும் ஒன்றாக்கியே இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

கொழும்பிலும், கண்டியிலும் பரவலாக, பதுளையிலும் இருந்த இயக்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டனர். இதில் ஆரம்ப கர்த்தாக்களான திரு.பெரிசுந்தரம், திரு.மோத்தா, திரு. கே.இராஜலிங்கம், ஜனாப். அkஸ், திரு.லெட்சுமணன் செட்டியார். ரு.வள்ளியப்பச் செட்டியார் ஞானபண்டிதன் போன்றவர்கள் ஒன்றிணைந்தனர். இதில் முதல் தலைவராக திரு.லெட்சுமணன் செட்டியாரும், ஜனாப்.ஏ.அkஸ் செயலாளராகவும் பதவி ஏற்றனர்.

இதைத் தொடர்ந்து இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகியது. ஆரம்பத்தில் தலைநகரில் இச்சங்கம் செயல்பட்டது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் மலையகத் தோட்டங்களில் செறிந்து வாழுகின்றனர். இவர்களையும் உள்ளடக்கியதாக ஒரு தொழிற்சங்கம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகியது. அதன் எதிரொலி நாடு முழுவதுமான சங்கமாக இலங்கை இந்திய காங்கிரஸ் உருவானது. அதன் வேலைத்திட்டங்களும் பரவலானது.

1937 ஆம் ஆண்டு இந்திய பிரதிநிதியாக பண்டிட் ஜவஹர்லால் நேருவால் இச்சங்கம் உருவாக்கப்பட்டது.

இலங்கை வாழ் இந்திய மக்களின் தொடர் கதையில் பின்னிணைந்து கொண்டவர் ஜனாப் அkஸ் அவர்கள் என்றால் அது மிகையாகாது. இளம் தலைவராக இந்திய வம்சாவளியினரின் பிரச்சினையை அடிக்கடி இந்தியாச் சென்று இந்தியத் தலைவர்களான பாரத தந்தை மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சல்ல பாய் பட்டேல் போன்ற பெருந்தலைவர்களுடன் ஆலோசனைப் பெற்று இலங்கை இந்திய காங்கிரசை மாபெரும் விருட்சமாய் வளர்த்தப் பெருமை அkசுக்குண்டு.

ஒன்றுதிரட்டல்

1939ஆம் ஆண்டு பாரத பிரதமரான திரு. பண்டிட் ஜவகர்லால் நேரு இலங்கை வந்தார். இவர் இலங்கையில் சிதறிக் கிடக்கும். இந்திய வம்சாவளியினரை ஒன்று திரட்டி இவர்களுக்கென ஒரு சங்கத்தையும், தலைமையையும் ஏற்படுத்த வேண்டுமென, பாரத தந்தை அண்ணல் மகாத்மா காந்தியின் தூண்டுதலால் இங்கு அனுப்பப்பட்டார்.

அவர் இலங்கை வந்து இந்திய வம்சாவளியினர் தலைவர்களான திரு.லெட்சுமணன் செட்டியார், திரு.வள்ளியப்பச் செட்டியார், ஜனாப் ஏ.அkஸ், திரு.தேசாய், திரு.மோத்தா போன்றவர்களை சந்தித்தார். பல கூறுகளாகவிருந்த இந்திய சங்கங்களை ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வந்தார்.

முதல் தலைவராக திரு.லெட்சுமணன் செட்டியாரையும், செயலாளராக ஜனாப். அkஸ் அவர்களையும் தெரிவு செய்தனர். இலங்கை இந்திய காங்கிரஸ் அரசியல் இயக்கமாகவும், இந்திய வம்சாவளித் தமிழருக்காக இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரசாகவும் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும், தொழிலாளர்களை ஒன்று திரட்டினர்.

அதனைத் தொடர்ந்து தலவாக்கொல்லைக்கு பண்டிட் நேரு அழைக்கப்பட்டார். அப்போது நான் 5ஆம் வகுப்பில் தலாக்கொல்லை துவிபாசா பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். பசுமலை நகரில் நேருவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஜனாப் அkஸ் அவர்களும் நேருவுடன் வந்தார்.

பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் வரவேற்பு - வாழ்த்துக் கீதம் பாடினோம். அkஸ் யார்? நேரு யார்? என்று எனக்குத் தெரியவில்லை. பண்டிட் நேருவின் தம்பிதான் அkஸ் என்று நம்பினேன். காரணம் நேரு உடுத்தியிருக்கும் சர்வானி - காற்சட்டையை தான் அkஸ் அவர்களும் உடுத்தியிருந்தார்கள். உருவ ஒற்றுமையிலும், இருவரும் ஒரே மாதிரித் தானிருந்தனர்.

அன்றிலிருந்து இன்று வரையிலும் எனது இதயம் கவர்ந்த தலைவராகவும், ஆற்றல் மிக்கத் தலைவராகவும் அkஸ் அவர்களை கருதி வருகிறேன். நான் எங்கிருந்தாலும், அவரை தலைவராகவே ஏற்றுக்கொண்டு வந்துள்ளேன்.

பண்டிட் வருகை

1939ஆம் ஆண்டு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் ஏகப்பிரதிநிதியும், தெளிந்த சிந்தனையானருமான ஜனாப். அkஸ் இலங்கையிலுள்ள நிலையை மிகத்தெளிவாயும், ஆணித்தரமாகவும், இந்திய காங்கிரஸ¤க்கு எடுத்துச் சொன்னார். இதன் காரணமாக பண்டிட் நேரு இலங்கை வந்தார்.

இந்திய காங்கிரஸ் மகாசபையின் ஏகத்தூதுவராகவும், இலங்கையில் இந்திய காங்கிரஸை அமைக்கவும் மூலகர்த்தாவாகவு மிருந்தார். இந்தியாவின் சுதந்திரந்தான் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இத னால் மிகப் பெரிய நாடான இந்தியா சுதந்திர மடைந்தால், இலங்கையும் சுதந்திரமடைய முடியும் என்ற நம்பிக்கை இங்குமிருந்தது.

இலங்கை வந்த பண்டிட் நேரு அkஸ் அவர்களுடன் காலஞ் சென்ற டி.எஸ்.சேனநாயக்காவையும், நேருவின் நண்பரான காலஞ்சென்ற பண்டார நாயக்காவுடனும், ஏனைய தலைவர்களுடன் பிரித்தானிய எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். இதனால் சுதந்திரதாகம் வேரூன்றியது என்றும் சொல்லலாம்.

இந்திய வம்சாவளியினரின் எதிர்ப்பை முறியடிக்கவும், இங்குள்ள இந்திய வம்சாவளியினரை ஒன்றுதிரட்டுவதும் மிக முக்கிய குறிக்கோளாக இருந்து வந்தது. சிதறிக்கிடந்த சங்கங்களை ஒன்றுபடுத்தி சரியான ஒரு தலைமையை உருவாக்கவே பண்டிட் நேரு விரும்பினார். அவரின் விருப்பமும் நிறைவேறியது.

இடதுசாரி போக்குள்ள நேருவிற்கு உற்றதுணைவராக ஜனாப் அkஸ் அன்றிருந்தார். அkஸ் அவர்களின் இடதுசாரி நோக்கமும், தீவிர பிரிட்டிஷ் எதிர்ப்பும், நேருவின் அன்பிற்கும், பண்பிற்கும் இவர் பாத்திரமானார். அkஸ் அவர்கள் இந்தியாவிலிருந்திருந்தால், நேருவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருப்பார். அந்த அளவிற்கு அkஸ் அவர்களின் அறிவாற்றலையும், செயல்திறனையும் நேரு பெரிதும் விரும்பினார்.

1939ஆம் ஆண்டு ஒப்பந்தம்

இலங்கையினதும், இந்தியாவினதும் சுதந்திரத்தையும், இலங்கை வாழ் இந்தி யர்களின் பாதுகாப்பினை வலுப்படுத்தவும், இலங்கையில் மத்திய அமைப்பு பிரதிநிதித் துவத்தினை இந்திய அமைப்புகளிடையே நியமிக்க வேண்டும் என்பதும் அவசியம்.

இக்கொள்கையினை ஏற்றுக்கொள்ளும் சகல இந்திய அமைப்பு பிரிவுகளிலிருந்தும் இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கின்றோம்.

தற்போது நடைமுறையிலுள்ள இரு அமைப்புகளான இலங்கை இந்தியன் காங்கிரஸ¤ம் இலங்கை இந்திய மத்திய அமைப்பும் இத்தகைய மத்திய அமைப்புக்களாக இருக்க வேண்டுமென கோருகின்றதால், இவை இரண்டையும் ஒருங்கிணைப்பதுடன் தற்போது நாட்டில் இதே அடிப்படை கொள்கையினை கொண்டு இயங்குகின்ற இந்திய அமைப்புக்களையும் ‘உருவாக்கப்படும்’ மத்திய அமைப்புடன் இணைந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இத்தீர்மானத்திற்கு வலுவூட்டும் வகையில் 25 அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்று கீழ்க்காணும் முறையில் அமைக்கப்பட வேண்டும்.

1. இலங்கை இந்தியன் காங்கிரஸிலிருந்து ஏழு அங்கத்தவரும், இலங்கை இந்திய மத்திய அமைப்பிலிருந்து ஏழு அங்கத்தவரும் ஒரு தலைவர், இரு செயலாளர்கள், ஒரு பொருளாளரும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

2. மேற்குறித்த பதினெட்டு அங்கத்தவர்களும் தமக்கேற்ற மேலதிக ஏழு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ள அதிகாரம் கொண்டுள்ளதுடன், அதன் பின்னர், முழுமையாக இருபத்தைந்து அங்கத்தவர்களைக் கொண்ட குழுவாக இது பூரணத்துவம் அடையும்.

3. இவ்வமைப்பின் பெயர் “இலங்கை இந்தியன் காங்கிரஸ்” என அழைக்கப்படும்.

4. தலைவராக திரு.வீ.ஆர்.எம்.வீ.ஏ.லெட்சுமணன் செட்டியார் அவர்களும், செயலாளர்களாக திருவாளர்கள் எச்.எம்.தேசாய், ஏ.அkஸ் ஆகியோரும் பொருளாளராக திரு.டி.எம்.வோரா அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அமைப்பின் நோக்கங்களும், குறிக்கோள்களும் பின்வருவனவாக அமையும்:

1. இந்திய மக்களுக்கு ‘பூரண சுயராஜ்ஜியமும்’

2. இலங்கை மக்களுக்கு ‘பூரண சுயராஜ்ஜியமும்’

3. இலங்கை வாழ் இந்திய மக்களுக்கான பூரண பாதுகாப்பினை மேம்படுத்துவதும்.

4. பொது அபிப்பிராயங்களில் இந்திய - இலங்கை வாழ் மக்களின் பூரண ஒத்துழைப்பையும், இலங்கைக்கும் - இந்தியாவிற்குமிடையில் நெருங்கிய உறவினையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதும் ஆகும்.

இந்திய விடயங்களில் ‘இந்திய தேசிய காங்கிரஸின், கொள்கை, பொது செயற்திட்டங்களை இவ்வமைப்பு வழிகோலும்’

இக்குழு உடனடியாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும். இதற்கான காரியாலயத்தையும், சம்பளம் பெறும் காரியாலய உதவியாளர், காரியதரிசி மற்றும் உத்தியோகத்தர்களையும் தேவைக்கேற்ப நியமிக்கும்.

இலங்கை - இந்தியன் காங்கிரஸ் ‘இலங்கை - இந்தியன் மத்திய அமைப்பு’ இவற்றின் அங்கத்தவர்களையும் இவ்வொப்பந்த அமைப்புக்கோவையில் கையொப்பமிட்டுள்ளவர்களையும் ஆரம்ப கர்த்தாக்களாக ஏற்றுக்கொள்வதுடன் இக்கமிட்டியினால் தீர்மானிக்கப்படும் விதிமுறைக்கமைய இதில் இணைய விரும்பும் ஏனைய இந்தியர்களையும் அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ளும்.

மேற்குறித்த குழு இவ்வமைப்புக்காள சட்ட திட்ட வரைவினை மேற்கொள்வதுடன் அவை 31.08.1939 ற்குள் முடிவு பெறவேண்டும். இச்சட்டதிட்டங்கள் குழுவினால் கடைசியாக முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்படும், இது இவ்வமைப்பின் சட்டதிட்டமாக அனுசரிக்கப்பட்டாலும் அமைப்பு பின்னர் கருதும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக கருதப்படும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.